“அரசக் குடும்பம், நீதிபதிகள் அல்லது நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்காக நீதிமன்றங்களும் நீதித்துறையும் நாடாளுமன்றமும் இல்லை. அனைத்து மக்களுக்கும் நீதி வழங்கவே அவை உள்ளள. அந்த நீதி மக்களின் வீடுகளைத் தேடிச் செல்ல வேண்டும்; விரைவாகவும் குறைந்த செலவிலும் நீதி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். நமது கலாச்சாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும். அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அரசமைப்புச் சட்டப்படி நமது கடமை. ஒவ்வொரு மதத்திற்கும் புனித நூல் உள்ளது. ஆனால், ஒவ்வோர் இந்தியருக்கும் அரசமைப்புச் சட்டம்தான் புனித நூலாகும். அதை நாட்டு மக்கள் அனைவரும் வாசிக்கவேண்டும்.”
- உயர்திரு. பி.ஆர்.
கவாய்,
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
“காப்பியங்களை
முழுமையாக ஆழ்ந்து படிக்கவேண்டும். மனிதராகப் பிறக்கும் அனைவருக்கும் நன்மை-தீமை என்ற கலப்புநிலை இருக்கும். இந்தக் கால இளைஞர்கள் எந்த ஒரு காப்பியத்தையும் முழுமையாகப் படிக்காமல் தீயவை இருப்பதாகக் கூறுகின்றனர். காப்பியங்களை எழுதியவர்கள் தீயவற்றைக் கூறுவதே இல்லை. காப்பியத்தில் தீமை இருப்பதுபோல தோன்றினாலும், ஆழமாகப் படித்தால் அதிலிருக்கும் உண்மைக் கருத்து விளங்கும்.”
- திரு. இலங்கை ஜெயராஜ்,
ஆன்மிகச் சொற்பொழிவாளர்
“பகல்காம்
தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்குக் கொண்டுவந்தேன் எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது இந்தியப் பொருள்களின் மீது 25% வரி விதித்திருக்கிறார்.
இந்தியா - இரஷ்யா பொருளாதாரம் சிதைந்து போய்விட்டால் இரு நாடுகளின் பொருளாதார வளம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதற்கான இந்த மிரட்டல் போக்கில் டிரம்ப் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் 140 கோடி மக்களும் விழிப்போடு எதிர்கொள்ள வேண்டும்.”
- முனைவர் வைகைச் செல்வன்,
மேனாள் அமைச்சர்