news-details
உலக செய்திகள்
பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர்களின் கண்டனம்!

பாகிஸ்தானில் கிறித்தவச் சிறுபான்மையினரின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், இஸ்லாமாபாத் நகரில் ஜமியத் உலேமா இஸ்லாம் (JUI) கட்சியின் தலைவர் முஹம்மது 1932-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, அண்மையில் அரசு அதிகாரிகளால்பசுமை மண்டலத்தில் அத்துமீறி கட்டப்பட்டுள்ளதுஎன்ற காரணத்தால் இடிக்கப்பட்ட மத்னி பள்ளிவாசல் சம்பவத்தை முன்னிட்டு அவர் கருத்துத் தெரிவித்தபோது, கிறித்தவ ஆலயங்களும் சில இமாம்பார்காக்களும் (ஷியா தொழுகை மண்டபங்கள்) அத்துமீறி கட்டப்பட்டவை எனக் குற்றம்சாட்டினார். மேலும், ஆலயங்களைகுப்பைக் கிடங்குகள்என்று இழிவாகக் குறிப்பிடப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெறுப்புரைக்கு பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு (PCBC) மற்றும் தேசிய நீதி மற்றும் அமைதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் நயீம் யூசுப் கில் ஆகியோர் ஆகஸ்டு 14 அன்று கூட்டு அறிக்கை வெளியிட்டு கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர்.