news-details
உலக செய்திகள்
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் 80,000 குழந்தைகளுக்குக் காலரா அச்சுறுத்தல்!

மழைக்காலத்தால் மோசமடைந்து வரும் தொடர்ச்சியான தொற்று நோய்கள் காரணமாக, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஏறத்தாழ 80,000 குழந்தைகள் காலரா தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆயிரக்கணக்கான காலரா நோயாளிகளையும், நூற்றுக்கணக்கான இறப்புகளையும் காங்கோ சனநாயகக் குடியரசும் நைஜீரியாவும்  பதிவு செய்துள்ளன என்றும், அவை இப்பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நலவாழ்வுக்கான உதவிகளைத் தீவிரமாக வழங்கி வருகிறது. மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு காலரா மீட்பு முயற்சிகளை வலுப்படுத்த, 166 கோடி ரூபாய் அளவிற்கு அவசர நிதியைக் கோரியுள்ளது.