ஜூலை 28 முதல் ஆகஸ்டு 3 வரை உரோமையில் கத்தோலிக்க இளையோர் ஒன்றிப்பு ஜூபிலி - 2025 நடைபெற்றது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆன்மிக விழாவில், 146 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான இளையோர் பங்கேற்றனர். ‘Pilgrims of hope’- ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’ என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை, “இளைஞர்கள் துணிச்சலுடன் நம்பிக்கையை வாழ்வாக்க வேண்டும்; சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமான வழிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்; நட்பும் நீதியும் உங்கள் வாழ்க்கையின் அடிப்படையாக வேண்டும்” என வலியுறுத்தினார்.