இம்பால் மறைமாவட்டம் சிங்காட்டில் உள்ள புனித தாமஸ் ஆலயத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காகப் புதிதாக 20 வீடுகளைக் கட்டி திறந்துள்ளது. இந்த வீடுகள் மே 2023-இல் மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே வெடித்த இன வன்முறையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. புனித தாமஸ் ஆலய அருள்தந்தை அதனாசியஸ், “பதவியேற்புக்குச் சற்று முன்பு வானத்தில் ஒரு வானவில் தோன்றியது, இது புயலைத் தொடர்ந்து எழும் நம்பிக்கை, புதிய தொடக்கங்கள் மற்றும் தெய்வீக உறுதிப்பாட்டின் சக்திவாய்ந்த அடையாளமாகும்” என்று பகிர்ந்துகொண்டார்.