“மனிதர்கள் மீது கடவுள் வெளிப்படுத்தும் விவரிக்க முடியாத அன்பை, புனித கன்னி மரியா நமக்குக் கற்பிக்கின்றார்.”
- ஆகஸ்டு 11, அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழா தயாரிப்புச் செய்தி
“துரோகத்தின் நிழல் மிகவும் அன்புக்குரிய நம் உறவுகளில் ஊடுருவும்போது, அது நமக்கு நன்கு தெரிந்த ஒரு துன்பமாகிறது.”
- ஆகஸ்டு 13, புதன் மறைக்கல்வி உரை
“உயிர்ப்பின் தூய ஆவியார் நம்மிடையேயும் நமக்குள்ளும் அமைதியாக இருந்து, ஒவ்வொரு நாளும் நம் இதயம் இறப்பிற்கு அப்பாற்பட்ட வாழ்வைப் பெற உதவுகின்றார்.”
- ஆகஸ்டு 17, அன்னை மரியா ரொத்தோன்ந்தா திருத்தலத்தில் திருப்பலி
“நற்கருணையில் திரு அவை பிறப்பெடுக்கின்றது, நற்செய்திப் பணியில் அது உயிருடன் வாழ்கின்றது.”
- ஆகஸ்டு 17, திருத்தந்தை லியோ அவர்கள் பணியேற்றதன் நூறாவது நாள்
“உண்மையாகச் செயல்படுவது ஒரு விலையைக் கொண்டுள்ளது என்றாலும், உலகில் பொய்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள்.”
- ஆகஸ்டு 17, மூவேளைச் செபவுரை