news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வாக்குத் திருட்டு குறித்த தகவலை நான் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டேன். அதை ஆதாரங்களுடன் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், போலி வாக்காளர்கள் குறித்து பா... தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களுக்குத் தேர்தல் ஆணையம் எவ்வித ஆதாரத்தையும் கேட்கவில்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். இதை எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே அவர் அறிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசால் உண்மையான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியாது; இடஒதுக்கீட்டிற்கான 50 விழுக்காடு உச்சவரம்பை நீக்கவும் முடியாது.”

- திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பிரதமர் புகழ்ந்து பேசியது அந்த நாளையே அவமதித்த செயலாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் புகழ்ந்து பேசியதும், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் சுதந்திர தின அழைப்பிதழில் இந்துத்துவக் கொள்கைத் தலைவர் சாவர்க்கரின் புகைப்படத்தை மகாத்மா காந்தியின் படத்திற்கு மேல் அச்சிட்டதும் மிகப்பெரிய சதியின் ஒரு பகுதி என்பதைக் காட்டியுள்ளது. வெறுப்புணர்வு, வகுப்புவாதம், கலவரம் என்ற மோசமான வரலாற்றை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சுமந்து கொண்டுள்ளது. மனித அன்பு மற்றும் பரஸ்பர உறவு என்ற நமது வரலாற்றைப் புதைத்து வெறுப்புணர்வு பரப்பும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்.”

- திரு. பினராயி விஜயன், கேரள முதல்வர்

ஒடுக்கப்பட்டவர்களின் தலைநிமிர்வுக்காக நாம் களத்தில் நிற்கிறோம்; தொடர்ந்து நிற்போம். மதச்சார்புள்ளக் கூட்டணி, மதச்சார்பற்றக் கூட்டணி என்பதே தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியமான அரசியல். ‘மதச்சார்பின்மை காப்போம்என்ற கருத்தியலை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதன் மூலமாகவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை நாம் மேலும் உறுதிப்படுத்த முடியும்.”

- திரு. தொல். திருமாவளவன், வி.சி.. கட்சித் தலைவர்