போதகர் அங்கூர் நருளாவின் நண்பரான ஜட்டிந்தர் மசிஹ் கௌரவ் அவர்களை பஞ்சாப் மாநிலச் சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக அம்மாநில அரசு நியமித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் கலனூர், குர்தாச்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பால்மிகி-புரொட்டஸ்டேண்ட் குடும்பத்தில் பிறந்த இவர், பிரிந்த சபை அமைப்புகளில் நன்கு அறியப்பட்ட முகமாக இருப்பவர். கத்தோலிக்கர் மற்றும் பழங்காலப் புரொட்டஸ்டேண்ட் மதப்பிரிவினர் பொறுப்பு வகித்த பின்னணியில், பெந்தகோஸ்து திரு அவையைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பு வகிப்பது இதுவே முதல் முறை.