‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத் தலைவர் மேதகு ஆயர் ஆனந்தம் அவர்களின் வாழ்த்து!
என்
நெஞ்சுக்கு நெருக்கமான நம் வாழ்வின் வாசகப் பெருமக்களே! 50 ஆண்டுகால நமது கனவு நனவாகும் நன்னாள் இன்று! 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு ஆயர் பேரவையின் பெரும் முயற்சியால் பிறப்பெடுத்த ‘நம் வாழ்வு’ ஒரு நாளிதழாக மலரவேண்டும் என்று யாவரும் எதிர்பார்த்திருந்த சூழலில், காலத்தின் தேவை அறிந்து, அதன் அருங்குறிகளுக்கு ஏற்ப (Signs of the Times), நவீனத்
தொழில்நுட்ப உலகின் சூழலுக்கு ஏற்றவாறு ‘நம் வாழ்வு’ எண்ணிமத் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் நாளிதழாக (E-Newspaper) மலர்வது
மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
திரு
அவை, சமூகம், சிறுபான்மையினரின்
அரசியல் பயணம், நாம் முன்வைக்கும் கோரிக்கைகள், உரிமைக்கான குரல் எனப் பல தளங்களில் செய்திகளைக்
கிறித்தவ இறைச் சமூகத்திற்கும் இன்றைய இளையோருக்கும் சமூக வலைத்தளம் மூலம் உடனுக்குடன் வழங்க இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
செய்திகளை
உடனுக்குடன் அறிந்துகொள்வதுடன், அதன் உண்மைத்தன்மையை அசை போட்டு, வீரியமிக்க செயல்பாடுகளை முன்னெடுத்து, திரு அவையையும் உலகையும் நாட்டையும் புதுப் படைப்பாக்கும் முயற்சியில் யாவரும் ஒன்றிணைய வாழ்த்துகிறேன்! ‘நம் வாழ்வின்’
இப்பயணம் தொடர ஆசி வழங்குகிறேன்.