கோட்டாறு மறைமாவட்டத்தின் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தினர் சாதியை மறுத்தும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வலியுறுத்தியும் பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் முகமூடிகள் அணிந்து உறுதிமொழி எடுத்தனர். இதில் கோட்டாறு மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் பொதுக்குழு கூட்டம் கோட்டாறு ஆயர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்க இயக்குநர் பணி. எடிசன் கலந்துகொண்டு, ‘ஆணவப் படுகொலைகளும் சாதிய மனநிலைகளும் - இளைஞரின் பதிலிறுப்பு’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.