news-details
வத்திக்கான் செய்திகள்
கடவுளால் இணைக்கப்படும் திரு அவையின் வலையமைப்பு!

திருப்பீடத்தின் நற்செய்தி அறிவிப்புப்பணித்துறையும், சமூகத் தொடர்புத்துறையும் இணைந்து யூபிலியின் ஒரு செயல்பாடாக, இணைய வழியில் மறைப்பணியாற்றும் அனைவரையும் ஒன்றாக இணைத்துச் செபிக்கவும், இந்த யூபிலியைக் கொண்டாடவும் இளையோரை அழைத்துள்ளது. இதன் தொடக்க விழாவில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின், “கடவுளால் இணைக்கப்படும் திரு அவையின் வலையமைப்பு நம்பிக்கையிலும் அன்பிலும் இணையத்தில் பகிரப்படும் ஒரு சிறிய பதிவுகூட இறையருளின் தீப்பொறியாக மாறும்என்று கூறியுள்ளார்.