“இழப்பு மற்றும் துன்பத்தின் முகம் வழியாக, கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் மிக நெருக்கமாக இருக்கிறார்.”
- ஆகஸ்டு 4, பெய்ரூட் துறைமுக வெடி விபத்தின் 5-ஆம் ஆண்டு நினைவுச் செய்தி
“திரு அவை என்னும் கிறிஸ்துவின் உடலில் சந்தித்தல், அறிந்துகொள்ளுதல், பகிர்தல் போன்றவற்றின் வழியாக அவரது உடலின் உறுப்புகளாக நாம் மாறுகின்றோம்.”
- ஆகஸ்டு 5, மெஜீகோரியில் 36-வது இளைஞர் விழா வாழ்த்துச் செய்தி
“நற்கருணையானது பலிபீடத்தில் மட்டுமல்லாது, நமது வாழ்க்கையின் எல்லாவற்றையும் ஒரு காணிக்கையாகவும் நன்றி செலுத்துதலாகவும் கருதி வாழும் அன்றாடக் கொண்டாட்டமாகும்.”
- ஆகஸ்டு 6, புதன் மறைக்கல்வி உரை
“நீதி, சகோதரத்துவம் மற்றும் பொது நன்மை ஆகியவற்றில் வேரூன்றிய ஓர் உலகளாவிய நெறிமுறையை நாம் உருவாக்க வேண்டும்.”
- ஆகஸ்டு 6, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல்களின் 80-வது ஆண்டு நினைவுச் செய்தி
“ஒருவர் தாராள உள்ளத்தோடு கொடுப்பதால் அவர் வேறுபட்ட ஒன்றைப் பெறுகின்றார்; அது தங்கமோ வெள்ளியோ அல்ல, மாறாக நிலைவாழ்வு.”
- ஆகஸ்டு 10, மூவேளைச் செப உரை