news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வழக்கறிஞர் தொழிலில் உள்ளவர்கள் அறம் சார்ந்து வாழவேண்டும். திருக்குறள் ஓர் உன்னதமான செல்வம்! வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் உங்கள் மேஜைமீது கண்டிப்பாக திருக்குறள் புத்தகம் வைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு குறளாவது படிக்கவேண்டும். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று கூறிய இந்த மண்ணில், தத்துவத்தை அறிந்து சட்டம் பயிலும் மாணவர்கள் அனைத்து நுணுக்கங்களையும் கற்க வேண்டும்

- மாண்புமிகு அரங்க. மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

சனநாயகத்தின் தூணாக நீதித்துறை விளங்குகிறது. வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் நீதித்தேரில் இரண்டு சக்கரங்களைப் போன்றவர்கள். வழக்குகளில் ஆஜராகும்போது வழக்கறிஞர்கள் முழு தயாரிப்போடு இருக்கவேண்டும். வழக்குத் தொடரும் கட்சிக்காரர்கள் தங்களது மனைவியைவிட தனது வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களைதான் பெரிதாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது.”

- மாண்புமிகு ஆர். சுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி

நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல நீதிபதிகளுக்கும் உண்டு. நீதிபதி ஒரு சொல்லை நீதிமன்றத்தில் தவறாகப் பயன்படுத்தினால், அதுவும் நீதிமன்ற அவமதிப்புதான் இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. இதை இன்று மக்கள் முன்னால் சொல்லவேண்டிய நிலைக்கு வழக்கறிஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமை வழக்கறிஞர்களுக்கு உண்டு. அதனால், இன்று நீதிமன்றத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.”

- திருமதி. . அருள்மொழி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்