“பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்வதை அரசு அறிந்திருக்கவில்லையா? அந்தப் பகுதியில் எந்தவிதப் பாதுகாப்பும் போடப்படாதது ஏன்? ஏன் அந்த மக்கள் கைவிடப்பட்டனர்? பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், மத்திய அரசு மற்றும் உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி. இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து வரும் நிலையில் மணிப்பூர் பற்றி எரிந்தது; தில்லி கலவரங்கள் நிகழ்ந்தன; தற்போது பஹல்காம் தாக்குதல். கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் மட்டுமின்றி வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இத்தகைய தொடர் உள்நாட்டுப் பாதுகாப்புத் தோல்விகள் நடைபெற்றபோது, அவர் இராஜினாமா செய்யாமல் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இடம் கொடுத்த பாதுகாப்பு குறைபாடுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகுவாரா?”
- திருமதி. பிரியங்கா காந்தி,
மக்களவை
காங்கிரஸ்
உறுப்பினர்
“தமிழ்நாட்டைச்
சனாதனமயப்படுத்த பா.ச.க.
துடிக்கிறது. இங்குள்ள கட்சிகளுடனும் சாதிய மதவாத அமைப்புகளுடனும் பா.ச.க.
இணைந்து செயல்படத் தொடங்கிய பிறகுதான் சாதியின் பெயரில் வன்முறைகள், கொலைகள் அதிகரித்திருக்கின்றன. சாதியக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டம் இயற்ற பா.ச.க.
ஆர்வம் காட்டவில்லை. தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருந்து, வெறுப்பு அரசியலைப் பரவவிடாமல் தடுக்கவேண்டும்.\"
- திரு. தொல். திருமாவளவன்,
தலைவர்,
விடுதலை
சிறுத்தைகள்
கட்சி
“ஒவ்வொரு
மாநிலத்திலும் காவல்துறைக்கு என ‘மாநிலப் பாதுகாப்பு ஆணையம்’ என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த ஆணையம்தான் காவல்துறையை வழிநடத்த வேண்டும். இந்த ஆணையம் காவல்துறையின் செயல்பாடுகளைக் கண்காணித்து, முறைப்படுத்தி நடுநிலையோடு செயல்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அச்செயல்பாடுகளை அறிக்கையாகச் சட்டமன்றத்தில் சமர்ப்பித்து, விவாதிக்க வழிவகுக்கும். இந்த ஆணையத்தின் அறிக்கையைச் சட்டமன்றம் முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும். மாநிலக் காவல்துறையின் அமைச்சர் இந்த ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்; எனினும் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. இந்த ஆணையத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முக்கியமான உறுப்பினராக இருப்பார். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும், மாநிலத் தலைமைச் செயலாளரும், மாநிலக் காவல்துறை தலைவரும் உறுப்பினர்களாகச் செயல்படுவர். மேலும், மதிப்பும் கண்ணியமும் கொண்ட அரசியல் சாராத பொதுமக்கள் மூன்று அல்லது ஐந்து பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இந்த ஆணையம்தான் காவல்துறையை நடத்த வேண்டும் எனும் நிலை ஏற்பட்டால், காவல்துறை தன் பணிகளைத் தன்னிச்சையாகச் செய்ய வாய்ப்புகள் அதிகம்.”
- உச்ச நீதிமன்றம்