அண்மைக்காலங்களில் இந்தியாவில் மதவாதச் சக்திகளால் சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமயச் சுதந்திரத்தை அச்சுறுத்தும் வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு போன்ற நிகழ்வுகள் அதிகம் பதிவாகியுள்ளன.
கடந்த
ஜூலை 26-ஆம் தேதி அன்று மிகவும் கவலைக்குரிய நிகழ்வு ஒன்று சத்தீஸ்கரில் உள்ள துர்க் இரயில் நிலையத்தில் நடந்துள்ளது. மேரி இமாக்குலேட் அசிசி துறவற சபை அருள்சகோதரிகள் ப்ரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவர் மீதும் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றக் குற்றங்கள் போலியாகச் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். சாதி, சமயம் பாராமல் ஏழை, எளியவர்களுக்காக உண்மையாக உழைத்துக் கொண்டிருந்த இந்த அருள்சகோதரிகளுக்கு நேர்ந்தது சனநாயகத்திற்கு எதிரான செயல் என தமிழ்நாடு ஆயர்
பேரவை வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறது.
அர்ப்பணிப்புடன்
செயல்படும் மதச்சிறுபான்மையினரை அச்சுறுத்தும் செயலாக இது அமைகிறது. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, அந்த இரு அருள்சகோதரிகளை எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. அத்தோடு, சமயச் சுதந்திரத்திற்கான உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும், தனிநபர்கள் சமய நம்பிக்கைகளுக்காக அநியாயமாகக் குற்றம் சுமத்தப்படவோ துன்புறுத்தப்படவோ கூடாது என உறுதி செய்யவும்
வேண்டும். சிறுபான்மையினரைத் தவறாகக் குற்றம்சாட்டப் பயன்படுத்தக்கூடிய மாநிலச் சட்டங்களின் சீர்திருத்தங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
பரந்த
நம் இந்திய நாட்டில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து, வேற்றுமையில் ஒற்றுமைப் பாராட்டி, சமயச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், இந்தியாவில் சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்கள் மீதான துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழ்நாடு ஆயர் பேரவை ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
+ மேதகு
பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி
தலைவர்,
தமிழ்நாடு ஆயர் பேரவை