இறை இயேசுவில் அன்பிற்குரியவர்களே..
‘சிறுமலர்’
என்று செல் லமாக அழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரேசா தன்னையே இறைவனுக்கென அர்ப்பணித்து, பிரான்ஸ் நாட்டில் லிசியே கார்மேலில் மறைந்து வாழ்ந்து, இருபத்து நான்கு வயதிலேயே இறந்தபோதிலும், அவர்களின் ‘சிறிய வழி’ உலகமெங்கும் சென்றடைந்து, புனிதத்தின் நறுமணம் அநேக ஆன்மாக்களை கவர்ந்திழுக்கவே, திரு அவை அவர்களை 1925-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம்
நாள் புனித நிலைக்கு உயர்த்தியது. எனவே, நம் அன்புச் சகோதரி சிறுமலர் தெரேசாவின் நூற்றாண்டினை இவ்வாண்டு மிக மகிழ்ச்சியுடன் சிறப்பிக்கின்றோம்.
புனிதம்
என்பது கற்றறிந்த சான்றோர்களுக்கும் வலிமையுடையோர்க்கும் மட்டும் என்பதல்ல; தந்தை இறைவனின் இரக்கமுள்ள அன்பில் நம்பிக்கை கொண்ட அனைவருக்குமே உரியது என்பதை, சிறுமலர் தெரேசா நமக்குக் கற்றுத் தருகிறார்.
நமது
அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறிய, சாதாரணமான செயலையும் மிகுந்த அன்புடன் செய்வது புனிதத்தின் மிகச்சிறந்த பாதை (Royal Road) என்றும், இறைவனில் முழு நம்பிக்கை கொண்டு தன்னையே கையளித்து வாழ்வோர்க்கும் எளியோர்க்கும் இப்பாதை மிகச்சிறந்தது என்றும் கூறுகிறார்.
“நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் சேரமாட்டீர்கள்” என்ற
இறைவார்த்தையைத் தனதாக்கிய சிறுமலரின் வாழ்வு, நாமும் சிறு குழந்தையைப் போன்று நம்மை முழுவதும் இறைவனின் கரத்தில் அளித்திட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது.
கார்மேல்
கன்னியர்களாகிய எங்களின் அன்புச் சகோதரி புனித தெரேசா எங்களின் அன்றாட வாழ்வில் எங்களை ஊக்குவிப்பவராகவும் உற்சாகப்படுத்துபவராகவும் இருக்கின்றார்.
சிறுமலரின்
பற்றி எரிந்த ஆன்மாக்கள்மீது கொண்ட தாகமும், மறைபரப்புப் பணியாளர்களின் மேல் அதிக அன்பு கொண்ட அவர்களின் அன்பு நிறைந்த இதயமும், எங்களின் செபங்களும், மறைந்த வாழ்வும் தியாகங்களும் திரு அவைக்கும் உலகத்திற்கும் மிக மிகப் பலன் அளிக்கக்கூடியவை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
அமைதியில்
வாழ்கின்ற எங்களது வாழ்வின் வழியாக நாங்களும், கிறிஸ்து இயேசுவோடு இணைந்த ஒன்றிப்பில் ஏற்படும் அன்பின் மகிழ்ச்சி, மணம் வீசும் அன்பு, எமது பரிந்துரை செபங்கள் அனைத்தும் ‘ரோசா மலர் மாரியைப் பொழிவிக்க’
அழைக்கின்றது.
இந்த
இனிய நூற்றாண்டு, புனித சிறுமலரின் அன்பின் செய்தியை நமக்கு ஊக்கமூட்டி உற்சாகப்படுத்துவதாக!
புனிதம்
என்பது அன்றாட வாழ்வின் சிறு செயல்களையும் இறைவன் திருமுன்னிலையில் அன்புடன் செய்திட வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக! நாம் சிறுவழியைப் பிரமாணிக்கமாய் பின்பற்றி வாழ்ந்திட புனித தெரேசா நமக்காகப் பரிந்து பேசுவாராக! விண்ணிலிருந்து ரோசா மலர் மாரியைத் திரு அவை மீதும், உலகத்தின் மீதும், நம் ஒவ்வொருவர் மீதும் பொழிவாராக!!
என்றும்
செபங்களுடன்
அருள்சகோதரி கரோலின்
President, St. Joseph Federation of South–East India