அசாம் மாநிலம் குவஹட்டியில் 44-வது இந்திய துறவறத்தார் ஒன்றிணைந்த கூட்டமைப்பு (CRI) கருத்தரங்கம் நடைபெற்றது. ஆகஸ்டு 30-ஆம் தேதி தொடங்கிய இந்தக் கருத்தரங்கம், தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்றன. ‘மேய்ப்புப் பணித்திட்டம்-2033’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வடகிழக்கு இந்தியாவின் 98 துறவற சபைகளைச் சேர்ந்த 115 பிரதிநிதிகள் பங்கேற்றனர். நற்செய்திப் பணி என்பது முழு ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் இருக்கவேண்டும் எனக் குருக்கள் செயலர் அருள்தந்தை லியோ சார்ல்ஸ் அறிவுறுத்தினார்.