திருத்தந்தை லியோ உக்ரேனிய மக்களுக்காக உடனடிப் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், அண்மையில் அமெரிக்காவின் மினசோட்டாவில் கத்தோலிக்கப் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், மவுரித்தேனியா கடற்கரையில் இறந்த புலம்பெயர்ந்தோருக்காகவும் தனது ஆழ்ந்த இரங்கலையும் இறைவேண்டலையும் தெரிவித்துள்ளார். மேலும், “ஆயுதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்; சகோதரத்துவமும் நீதியும் தளிர்க்க வேண்டும்!” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். “உலகில் ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் அல்லது காயமடையும் குழந்தைகளுக்காக அன்றாடம் இறைவேண்டல் செய்வதாகக் கூறிய திருத்தந்தை, “உலகத்தைப் பாதிக்கும் பெரிய மற்றும் சிறிய ஆயுதங்களின் தொற்றுநோயைத் தடுக்க கடவுளிடம் மன்றாடுவோம்” எனவும் அழைப்பு விடுத்திருக்கிறார்.