news-details
தமிழக செய்திகள்
முதன்மைக் குருவின் வாழ்த்துரை

கோவை மறைமாவட்டம், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்கா, மறைமாவட்டத்தின் முதல் தலைமை ஆலயமாக உருவானது. இந்த அழகுமிக்க பசிலிக்கா மறைமாவட்டத்திற்குப் பெரும் புகழைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை திருப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகின்றது. குறிப்பாக, ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் இங்கு வருகை புரிகின்றார்கள். பசிலிக்கா நம்மையும் இறைவனையும் மிக நெருக்கமாகச் சந்தித்து உரையாட வைத்து இறைவனின் அர்ச்சிப்பைப் பெற்றுக்கொண்டு நம்மைப் பிறருக்கு நல்ல மனிதர்களாக மாற்றுகின்ற ஓர் உன்னதமான இடம்.

இங்கு வரும் அனைத்து மக்களும் ஏராளமான வரங்களை மகிழ்ச்சியோடு பெற்றுச்செல்ல இந்த இறைவேண்டலின் வீடு துணைபுரிவதாக! இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். பசிலிக்கா அதிபர், அருள்தந்தையர்கள், பங்கு இறைமக்கள், வருகின்ற திருப்பயணிகள் அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.