தன்னை மறந்த வாழ்வு வாழ்ந்தாள்!
தியாகத்தின்
சின்னமாக ஒளிர்ந்தாள்!
மலராய்ப்
பூத்து மணம் வீசினாள்!
மனித
வாழ்வுக்கு அழகு சேர்த்தாள்!
அன்பு
என்றால் அவளின் நினைவு!
அமைதி
என்றால் அவளின் குரல்!
அருள்
என்றால் அவளின் முகம்!
கருணை என்றால்
அவளின் கொடை!
கடவுளை
மட்டும் நேசித்தாள்!
ஊமை ஆயினும்
உள்ளத்தில் பேசுவாள்!
அமைதியின்
அவதாரம் அவளே!
உலகின்
துன்பத்தை உற்றுநோக்கி!
உலகுக்குத்
தன்னை அர்ப்பணித்தாள்!
அகவை
இருபத்தி நான்கில் உலகைப் பிரிந்தாள்!
வானில்
சென்று புனிதம்
பெற்றாள்!
லிஸ்யூ நகரின்
தேவதை அவளே!
அவளின்
நூற்றாண்டைக் கொண்டாடுவோம்…
நம்
மண்ணிலே!
மனிதம்
காப்போம் என்றென்றுமே!…