news-details
இந்திய செய்திகள்
அரசியல் களம் - அதிரும் எதிரொலி!

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி, விவசாயிகளைக் காப்பதற்காகத் தனிப்பட்ட முறையில் எதையும் இழக்கத் தயாராக இருப்பதாக மோடி கூறினார். ஆனால், பல கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கத் தவறிவிட்டார். அமெரிக்க ஏற்றுமதியை நம்பியுள்ள சிறு தொழில்துறை, நவரத்தின ஆபரணத் தயாரிப்புத் தொழிலில் இலட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பறிபோகும். வெளிநாட்டுத் தலைவர்களைக் கட்டித்தழுவுவது, சிரித்து மகிழ்வது, தற்படம் எடுத்துக்கொள்வது போன்ற பிரதமர் மோடியின் மேம்போக்கான வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது.”

திரு. மல்லிகார்ஜீன கார்கே, காங்கிரஸ் தேசியத் தலைவர்

டிரம்ப் இன்றைக்கு என்ன கூறினார் என்பதை அறிவீர்களா? இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் மோடியைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ‘24 மணி நேரத்திற்குள் சண்டையை நிறுத்திவிட வேண்டும்என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்குப் பிரதமர் மோடி உடனடியாகக் கீழ்ப்படிந்திருக்கிறார். 24 மணி நேரம் அவகாசம் அளித்தபோதும், பாகிஸ்தான் உடனான சண்டையை அவர் அறிவுறுத்திய 5 மணி நேரத்தில் பிரதமர் நிறுத்தியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆகஸ்டு 27 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.”

திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

பீகாரில் நியாயமாக வாக்குப் பதிவு நடைபெற்றால் பா... கூட்டணி தோற்றுவிடும் என்பதால், மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள். சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாகத் தேர்தல் ஆணையத்தைப் பா... மாற்றிவிட்டது. 65 இலட்சம் பீகார் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது சனநாயகப் படுகொலையாகும். சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதைவிட பயங்கரவாதம் வேறு இருக்க முடியுமா?”

மாண்புமிகு திரு. மு.. ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர்

இந்திய மக்கள் கடந்த 40,000 ஆண்டுகளாக ஒரே மரபணுவைப் பெற்றுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகாலச் சமூக சமத்துவ மேன்மை குறித்து நாம் பேசுகிறோம்; அவர்கள் பா..., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தற்போதைய அமைப்பானது 40,000 ஆண்டுகள் தொன்மையானது என்று பேசுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பா... தோற்கடிக்கப்பட்டது. தற்போது பீகாரிலிருந்து அக்கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது.”

திரு. அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்

தமிழ்நாட்டில் திரையுலகமும் அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்போடு பயணித்து வருகிறது. ‘தலைவர்களைக் களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயம்தானா?’ என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது. அரசியல் ஆர்வம், கொள்கைப் பிடிப்பு, மக்கள் சேவை ஆகிய எண்ணங்களுடன் எந்தத் துறையிலிருந்து யார் வந்தாலும் மக்கள் ஆதரவு இருந்தால் அவர்கள் எந்த உச்சத்தையும் பெற முடியும் என்பதை தமிழ்நாட்டு அரசியல் உணர்த்தி இருக்கிறது

திரு. மு. தமிமுன் அன்சாரி, மனிதநேய சனநாயகக் கட்சித் தலைவர்

சனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், மாற்று அரசியல் பேசலாம்; அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமின்றி எந்தத் துறையிலிருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை. ஆனால், மாற்று அரசியல் பேசி புதிய கட்சி தொடங்குவோர் இப்போது உள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து எந்த வகையில் மாற்றுக்கொள்கைகளை முன்வைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். திரைக் கவர்ச்சி மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தரும் என நடிகர்கள் புதிய கட்சிகள் தொடங்கிமாற்றுஎனக் கூறி ஏமாற்றமாக மாறியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.”

திரு. கே. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி