news-details
இந்திய செய்திகள்
கிறித்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்குக் கண்டனம்!

காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் வி.டி. பால்ராம், “கேரளத்தில் கிறிஸ்தவச் சமூக மாணவர்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் முறையற்று உதவி பெற்றுள்ளனர்; இதன் காரணமாக, முஸ்லிம் சமூக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்என்று குற்றம் சாட்டியிருந்தார். “சர்ச்சைக்குரிய இக்குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது; சமூக விரிசல்களை ஏற்படுத்தக்கூடியதுஎன்று சீரோ-மலபார் திரு அவை வன்மையாகக் கண்டித்துள்ளது. இக்குற்றச்சாட்டுகள் சமூக அமைதிக்குப்  பாதிப்பை உண்டாக்கும் என்று எச்சரித்துள்ளதுடன், அரசியல் நன்மைக்காக மத அடிப்படையிலான பிரிவினை வாதங்களைத் தூண்டுவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.