கோவை மறைமாவட்டத்தில் உள்ள புனித செபமாலை அன்னை பசிலிக்கா தமிழ்நாட்டின் 7-வது பசிலிக்காவாகும். இந்தப் பசிலிக்காவின் வரலாறு 385 ஆண்டுகள் கொண்டதாகும். இங்கு வரும் மக்கள் ஏராளமானோர் அன்னையைத் தரிசித்து இறையேசுவின் வழியாக அருள் வரங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.
அன்னையின்
அளவிட முடியாத அன்பும் அரவணைப்பும் வழிநடத்துதலும் பரிந்துரையும் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் நம்பிக்கை கீதங்களாக ஒளிர்கின்றன.
நம்
அன்னையின் பெருவிழா வருகின்ற அக்டோபர் முதல் ஞாயிறு 5-ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இறைமக்கள் அனைவரும் பெரும் திரளாகக் கலந்து கொண்டு அன்னையின் வழியாக இறைமகன் இயேசுவின் அருளைப் பெற்றுச் செல்ல எம் மறைமாவட்ட அருள்தந்தையர்கள், இருபால் துறவியர்கள் மற்றும் எம் பங்கு மக்களோடு இணைந்து இறைவனின் ஆசிர்பெற உங்களை அன்புடன் அழைக்கின்றேன். அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்!