குழந்தை தெரேசா குழந்தை பருவத்திலிருந்தே மிகுந்த செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர். ஆனால், குறைகளே இல்லாமல் வாழ்ந்தவர் அல்லர்; கொடுமையிலும் கொடுமை தாயை இழப்பது. இந்த மாபெரும் கொடுமை நான்கு வயதில் நடந்தது. ஆம்! தன் தாயை இழந்து சொல்லெண்ணாத் துயர் அடைந்தார். இந்த இழப்பு அவரை மனதளவில் மிகவும் பாதித்தது. பின் தன் சகோதரிகளில் ஒருவரான பவுலினைத் தன் தாயாக நினைத்து வாழ்ந்து வந்த சூழலில், அவரும் குழந்தை தெரேசாவிற்கு ஒன்பது வயது இருக்கும்போது பவுலின் கார்மேல் மடத்திற்குச் சென்றார். மற்றோர் இடியாகத் தனக்குக் கிடைத்த இரண்டாம் தாயையும் இழந்து தவித்தார். இப்படிக் குழந்தை பருவத்தின் பாதிப்பு குழந்தை தெரேசாவிற்கு அதிகமாகவே இருந்தது.
‘ஃபிராய்டு அட்லர்’ போன்ற மனோதத்துவ நிபுணர்கள், ‘ஒருவர் குழந்தையாக இருக்கும்போது ஏற்படுகின்ற காயங்களும் வேதனைகளும் ஒருவரை மீண்டும் எழுந்துவர முடியாத அளவிற்குப் பாதிக்கும்’ என்கிறார்கள்.
ஆனால், இந்தத் தத்துவத்தைக் குழந்தை தெரேசா இறைவன் அருளால் சுக்குநூறாக உடைத்து, இறைஉறவில் வளர்ந்து இறைவனையே தன் தாயாக, தந்தையாக மாற்றிக்கொண்டார்.
சிறுமலர் பேரிலும்
ஆன்மிகத்திலும்
எளிமை
குழந்தை
தெரேசா சிறுவயதிலிருந்தே மலர்களை இரசிக்கும் குணம் கொண்டவர். காடுகளிலே காண்பாரற்றுக் கிடக்கின்ற எளிய வகை மலர்தான் கார்ன்காக்கில். இந்தச் சிறிய வகை எளிய மலர்களோடுதான் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார்.
பெரிய பெரிய வண்ண வண்ண மலர்களும், நறுமணம் வீசும் மலர்களும் மட்டுமல்ல, இச்சிறுவகை மலர்கள்கூட இறைவனை மகிமைப்படுத்துகின்றன. எனவேதான் தன்னை ஒரு சிறுமலராக இணைத்துக்கொண்டார்.
சிறுமலர்
தெரேசாவிடத்தில் முதலில் ஆன்மிகக் குழந்தைத்தனம் இருந்தது. மிகுந்த அடம்பிடிக்கின்ற, உணர்ச்சிவசப்படுகின்ற நபராக இருந்தார். சிறு தவறுகள் கூட கடவுளின் அன்பை முற்றிலும் இழக்கச் செய்யும் என்றிருந்தார். பின்பு அதையே ஓர் ஆன்மிகமாக அமைத்து, குழந்தைத்தனத்திலிருந்து குழந்தை மனம் கொண்ட ஆன்மிகமாக மாற்றி, தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்து நமக்குச் சிறுவழி ஆன்மிகம் தந்திருக்கிறார்.
இறைவனிடத்தில்
குழந்தைபோல்
நம்பிக்கை
வைப்பது
குழந்தைகளிடத்தில்
பகைமையின்றி அன்பிருக்கும், எதிர்மறை எண்ணமின்றி நேர்மறை குணம் இருக்கும், பாகுபாடின்றி எல்லாரையும் ஏற்கும் மனமிருக்கும், உள்ளத்தில் தூய்மை, வாழ்வில் எளிமை இவைகளே குழந்தையின் அணிகலன்கள். இவைகளையே குழந்தை தெரேசா தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். ‘நான் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது. ஆனால், சிறிய காரியங்களில் நான் அன்புடன் செய்ய விரும்புகிறேன்’ என்று
சிறுவழி ஆன்மிகத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
சிறுமலர் தெரேசாவின்
உச்சக்கட்ட
ஆன்மிகம்
குழந்தை
தெரேசா தனது சுயசரிதையில் (ஓர் ஆன்மாவின் வரலாறு) எவ்வாறு நாம் அன்பு செய்ய வேண்டுமென்று விளக்குகிறார். இயேசு பத்துக் கட்டளைகளைச் சுருக்கி, இரண்டு கட்டளைகளாகக் கொடுத்தார். கடவுளை அன்பு செய்வது முதல் கட்டளையாகவும், தன்னை நேசிப்பதுபோல் பிறரையும் நேசிப்பதை இரண்டாம் கட்டளையாகவும் கொடுத்தார். இந்த இரண்டாம் கட்டளையில் உள்ள சிக்கல் என்னவென்றால், நான் என்னை அன்பு செய்வது போன்று, பிறரையும் அன்பு செய்வது என்பது சிக்கல் நிறைந்த ஒன்றாக இருப்பதை குழந்தை தெரேசா உணர்ந்தார். “நான் என்னை எவ்வளவு அன்பு செய்கின்றேன்? ஒருவேளை கால்வாசி, அரைவாசி என்று அன்பு செய்தால் பிறரை அதே அளவு அன்பு செய்தால் போதுமா?” இதுபோன்ற கேள்விகள் குழந்தை தெரேசா மனத்தில் உதயமாயின. அதற்கு அவர் கண்ட விடைதான் “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவா
13:34). ஆகவே, நான் என்னை அன்பு செய்வது போன்று மட்டுமல்ல, இயேசு என்னை அன்பு செய்வது போன்று பிறரை அன்பு செய்ய வேண்டுமென்று கண்டுணர்ந்தார். அன்றிலிருந்து இயேசு எவ்வாறு தன்னோடு பேசுவாரோ, அவ்வாறே பிறரோடு பேச ஆரம்பித்தார். இயேசு எவ்வாறு தனக்கு உதவி செய்தாரோ, அவ்வாறே பிறருக்கும் உதவி செய்தார். இயேசு எவ்வாறு தனக்குச் செவிமடுத்தாரோ அவ்வாறே பிறருக்கும் செவிமடுத்தார்.
இப்படி
அவர் மூச்சிலும் பேச்சிலும் செயலிலும் நம்பிக்கையிலும் இயேசுவை மையமாகக் கொண்டார். இதை
அவர் எவ்வாறு செய்தாரென்றால் ‘இயேசுவே, நான் என்னை அன்பு செய்ததுபோல பிறரை அன்பு செய்ய முடியாத நிலையில் உள்ளேன். நீரே என்னில் வந்து என் வழியாகப் பிறரை அன்பு செய்யும்’
என்று தன்னையே இயேசுவுக்கு முழுமையாக ஒரு குழந்தையைப்போல் ஒப்புக் கொடுத்து விட்டார். இயேசுவும் குழந்தை தெரேசாவோடு இரண்டறக் கலந்து, இன்றும் குழந்தை தெரேசாவின் வழியாக நம்மை அன்புசெய்து வருகிறார். நாமும் இப்படி ஒரு வாழ்வு வாழ அழைக்கின்றார். சிறுவழி ஆன்மிகத்தைச் செயல்வழி ஆன்மிகமாக மாற்றி வாழ முயற்சிப்போம்.