திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களால் 2012-ஆம் ஆண்டு அருளாளராக அறிவிக்கப்பட்ட அருள்சகோதரி மரியா துரொன்காத்தி அவர்களுக்குத் திருத்தந்தை லியோ அவர்கள் அக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை உலக மறைப்பணி ஞாயிறன்று புனிதர் பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளார். தான் ஒரு மறைப்பணியாளராக இருக்கவேண்டும் என்பதையே தனது உறுதியான நம்பிக்கையாகக் கொண்டு வாழ்ந்த இத்தாலியைச் சேர்ந்த சலேசியச் சபை அருள்சகோதரியான மரியா துரொன்காத்தி அவர்கள், 1883-ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று பிரேசியாவில் பிறந்தார். 1969, ஆகஸ்டு 25 அன்று குயிட்டோவிற்குச் சென்ற அவர், விமான விபத்தில் இறந்தார்.