news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (14.09.2025)

நற்கருணை என்பது திரு அவையின் உன்னதமான செல்வமாகும்; அதைவிட உயர்ந்ததும் மதிப்புமிக்கதுமான செல்வம் இவ்வுலகில் எதுவும் இல்லை.”

- ஆகஸ்டு 25, பிரான்ஸ் நாட்டின் பீடப்பணியாளர்கள் சந்திப்பு

நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பதிலும், வலுவற்றவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு ஆறுதலாகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

- ஆகஸ்டு 26, வல்தேசா திரு அவை ஆயர் மாமன்றக் கூட்டச் செய்தி

அன்பிற்காக உயிரை இழப்பது என்பது தோல்வி அல்ல; மாறாக, மறு உலக வாழ்விற்கான வெற்றி!”

- ஆகஸ்டு 27, புதன் மறைக்கல்வி உரை

நம் அருகில் வாழ்வோர் இனி எதிரிகள் அல்லர்; மாறாக, கிறிஸ்துவினால் ஒன்றிணைக்கப்பட்ட நம் சகோதரர் மற்றும் சகோதரிகள்.”

- ஆகஸ்டு 28, பிரான்சின், கிறித்தவ அரசியல் பிரதிநிதிகள் சந்திப்பு

திருமுழுக்கினால் அழைக்கப்பட்ட நாம் அனைவரும், கிறிஸ்துவில் ஒன்றாய் வாழவேண்டியது நமது கடமையாகும்.”

- ஆகஸ்டு 29, தூய அந்திரேயா நற்செய்தி அறிவிப்புப் பள்ளிகளின் உறுப்பினர்கள் சந்திப்பு

அனைத்து நாடுகளுக்கிடையேயான பன்முக ஒத்துழைப்பு, உரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை ஊக்குவிக்கவேண்டும்.”

- ஆகஸ்டு 30, ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் மனங்காக்வாவுடன் சந்திப்பு

தாழ்மை எனும் புண்ணியத்தை நமதாக்கும்போது, கடவுளுடைய அரசும் அதன் நீதியும் நம் வாழ்க்கையின் மையமாகிறது.”     

- ஆகஸ்டு 31, மூவேளைச் செப உரை