news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (21.09.2025)

உதவி செய்தல், வரவேற்றல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய மூன்றும், மனிதகுலத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தள அம்சங்களாகும்.”

- செப் 1, ஏழைகளுக்கான புனித பிரான்சிஸ் பணிக் குழுவினர் சந்திப்பு

உண்மை எளிமையானது போலத் தோன்றினாலும், அதை வாழ்வது எளிதல்ல. இந்த உலகம் வெற்றிக்கே மதிப்பளிக்கிறது; உண்மையுடன் வாழ்வது ஒரு சவாலாகிறது.”

- செப் 2, புனித அகுஸ்தினார் சபையின் பொதுப்பேரவை திருப்பலி

நியாயமும் மாண்பும் மறுக்கப்பட்டு வருகிறவர்களுக்கு நீங்கள் குரலாகுங்கள். நம்பிக்கையின் சுடர் மங்கியுள்ள இடங்களில், நீங்கள் ஒளியாகவும் உப்பாகவும் இருக்கவேண்டும்.”

- செப் 3, புதன் மறைக்கல்வி உரை

இயேசுவின் வாழ்க்கை என்பது நம்பிக்கையின் புதையல். அந்த வாழ்க்கையைத் தேடும் பயணத்தில், நாம் உன்னதமான படைப்பாக மாறவேண்டும்.”

- செப் 5, மத்திய தரைக்கடல் இளைஞர் மன்றத்தினருடன் உரையாடல்

தேடுதலின் மனிதர்களாக, இயேசுவின் வாழ்க்கை என்னும் நம்பிக்கை நிறைந்த புதையலைத் தோண்டும் ஓர் உன்னதப் படைப்பாக மாறுவோம்.”

- செப் 6, யூபிலி ஆண்டு மறைக்கல்வி உரை

சூரியனுக்கு முன்னால் நின்று அதன் ஒளியைப் பெறும் நாம் நிறம் மாறுகின்றோம். அதுபோல, நற்கருணைக்கு முன்பாக நிற்கும் நாம் ஒரு புனிதராக மாறுகின்றோம்.”

- செப் 7, அருளாளர்களான பியர் ஜார்ஜியோ பிரசாத்தி மற்றும் கார்லோ அக்குதிஸ் புனிதர் நிலைக்கு உயர்த்தும் திருப்பலி