“வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் மற்றும் சனநாயக முறையின்மீது நடத்தப்படும் மிகப்பெரும் தாக்குதலாகும். தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் என அனைவருக்கும் வாக்குரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், மகாராஷ்டிரம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேசிய சனநாயகக் கூட்டணி அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டு, தேர்தலில் வெற்றிபெற்று வருகிறது. இதைப் பீகாரில் அரங்கேற்ற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. வாக்குத் திருட்டுக்கு எதிராகப் பீகாரில் தொடங்கிய இந்தப் புரட்சிப்பயணம் விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து தேசிய இயக்கமாக உருவெடுக்கும். தற்போது பா.ச.க. தலைவர்களை ‘வாக்குத் திருடர்கள்’ என மக்கள் அழைக்கத் தொடங்கி விட்டனர்”
- திரு. இராகுல் காந்தி,
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
“அமெரிக்க
அதிபர் டிரம்ப் இந்தியாமீது 50 விழுக்காடு வரி விதித்துள்ளார். இரஷ்யா கச்சா எண்ணையைக்
குறைந்த விலைக்குத் தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், அம்பானிக்கும் அதானிக்கும்தான்
கச்சா எண்ணெய் குறைந்த விலைக்கு இரஷ்யா கொடுக்கிறது. அதன் பயன் இந்திய மக்களுக்குச்
சென்றடையவில்லை. அமெரிக்காவின் வரிவிதிப்பால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகிறது.
மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது.”
- திரு. செல்வப் பெருந்தகை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
“சாதி
ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக
இருக்கிறது. அதேபோல், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு,
இடஒதுக்கீடும் தரவேண்டும். தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாகப் பரிசீலித்து நடவடிக்கை
எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பார் என
நம்புகிறோம்.”
- இரா. முத்தரசன், சி.பி.ஐ.
மாநிலச் செயலாளர்