தொங்கும் தோட்டம்
எங்கும்
தோட்டம்
ஏதேன்
தோட்டம்
ஏமாந்த
தோட்டம்
அந்தத்
தோட்டத்தின் நடுவே
அழகிய
பழமரங்கள்
அந்த
மரங்கள் நீரால்
வேர்
வாழ்கிறது;
வேரால்
மரம் வாழ்கிறது;
மரத்தால்
கிளை வாழ்கிறது;
கிளையால்
பூ வாழ்கிறது; பூவால் காய் வாழ்கிறது;
காயால்
கனி வாழ்கிறது.
அந்தக்
கனியால் வாழ்வுபோனது!
போன
வாழ்வைப் பெற்று தந்தவர்தான் மரியா என்ற பெண். அவர்தான் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டு இயேசுவின் தாயாக, ஏன் மனுக்குலத்தின் தாயாக, காலமெல்லாம் காத்து நிற்கும் செபமாலைத் தாயாக, செயம் தரும் தாயாக, வெற்றித் திலகமிட்டு நம்மிடம் வருவோரை வரவேற்கும் செபமாலைத் தாயாக, கருமுத்தான் நகரில் குடி கொண்டுள்ளார். கடைகோடி மக்களையும் கைவிடப்பட்டவர்களையும் கரைசேர்க்கும் தாயாக இருகரம் நீட்டி வாஞ்சையுடன் வரவேற்கும் அந்தத் தாயின் அன்பை, ஆசிரைப் பெற்றிட வாருங்கள்.
ஏதேன்
தோட்டத்தில் அறிமுகமான மரியா 1595-இல் கொங்குத் தோட்டத்தில் செபமாலை அன்னையாக வலம்வர, மதுரை மறைப் பணித்தளத்தில் பணி செய்த தெ நோபிலி அடிகளாரின்
பெரும் முயற்சியால் தந்தை பல்தசார் வழியாக உருவானது என்பது வரலாறு. அன்று முதல் இன்றுவரை அன்னையின் புகழ் அகிலமெங்கும் பரவியதன் விளைவாக இன்று பசிலிக்காவாக உயர்ந்துள்ளது.
அரசியின் ஆட்சி:
அன்னை மரியாவை வீரமாமுனிவர் “மழையானவளாய், பேரன்பு பொருந்தியவளாய், வருத்தத்தை ஒழிக்கும் மகிழ்ச்சியானவளாய், ஞானமாகிய நிறை ஒளியானவளாய், மகிழ்ச்சி பொங்கும் தாவீது அரசரின் மாளிகையானவளாய், நீர் வற்றாத கடலானவளாய், துன்ப இருள் போக்கும் பிறை நிலவாய், செபமாலையைச் செங்கரத்தில் ஏந்தி நம் தாய், நம் அனைவரின் அரசியாய் இருந்து ஆட்சி செய்கிறார்” என்கிறார்.
மரியாவின் உதவி
யாருக்கு?
மரியாவின் உதவி மனிதருக்குத்தானே என்று சொல்வார்கள். உண்மையில் சிந்தித்துப் பார்க்கும்போது கடவுளுக்குத்தான் முதலில் தேவைப்பட்டது. “விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவளத்தை நிறைவேற்றுபவரை என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்”
(மத் 12:50) எனும் இயேசுவின் இறைவார்த்தையை இதயத்தில் சுமந்த என்னை மரியா கடவுளுக்கே முதல் உதவி செய்தார். மேலும், விண்ணகத்திற்கும் உதவி செய்கிறார்கள். “உன் சொற்படியே எனக்கு ஆகட்டும்”
என்று கூறிய அந்த நிமிடம் முதல் மரியாவின் பணிவாழ்வு தொடங்கியது எனலாம். இந்த நிகழ்வின் வழியாக உலகம் மீட்படையத் தொடங்கியது. மரியாவைப்போல் இறைவிருப்பம் அறிந்து செயல்படும்போது நாமும் மீட்புப் பணியில் பங்குப் பெறுகின்றோம் என்பதை உணர்ந்திடுவோம். தந்தை, மகன், தூய ஆவியின் குடும்பத்திற்குத் துணை நின்று பொறுப்பேற்று வாழ்ந்தவர்தான் மரியா. எனவே, கடவுளுக்கு முதற்பணியாக மரியாவின் வாழ்வு அமைந்தது.
மரியாவின் பிறர்நல
பணிகள்:
அன்னை மரியாவின் பிறரன்புப் பணிகள் கானாவூர் திருமண நிகழ்வில் காணமுடிகிறது. “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவா
2:5) என்றார்கள்.
நாமும் அவர் சொல்வதை எல்லாம் செய்யும்போது மரியாவின் பிள்ளைகள் ஆகிறோம், அன்னை மரியா கடவுளுக்கு மட்டுமல்ல, மனிதனுக்கும், இயேசுவின் இறப்பின்போதும் உதவிக்கரம் நீட்டுகிறார். அதனால்தான், மரியாவை நமக்குத் தாயாகத் தந்தார். இறையருளால் மகிழும் அன்பு பொருந்திய பக்தர்களை விண்ணகம் சேர்க்கக் காத்து நிற்கும் செபமாலை அன்னை அவரே. நமக்காகத் தம் மகனிடம் பரிந்து பேசி, விண்ணக வாழ்வைப் பெற்றுத் தருகின்றவராக இருக்கின்றார்.
ஆகவே,
அன்னையிடம் செல்வோம்; அவர் வழி நடப்போம்; விண்ணக வாழ்வைப் பரிசாகப் பெறுவோம். மரியே வாழ்க!