“நம் வாழ்வின் அனைத்துச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள, நம் அன்னை மரியாவை எடுத்துக்காட்டாக, அடையாளமாகக் கொண்டு வாழ்கிறோம்.”
- ஆகஸ்டு 18, பியாட்சா சன்
பியெத்ரோ
என்னும்
பத்திரிகை
“அன்பை விட்டுக்கொடுக்காமல் மன்னித்து மாண்புடன் முன்னேறிச் செல்வதே கிறித்தவ வாழ்க்கை”
- ஆகஸ்டு 20, புதன் மறைக்கல்வி
உரை
“இறைச்சட்டத்தின் தேவைகள், மனிதனின் மனசாட்சி, சுதந்திர இயக்கவியல் ஆகியவற்றிற்கு இடையில் சமநிலையைப் பேணிய புனிதர்களின் ஞானமிக்க முன்மாதிரியைப் பின்பற்றுவதே உலகின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி.”
- ஆகஸ்டு 21, 17-வது பன்னாட்டு அறநெறி, இறையியல் மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்குச் செய்தி
“இன்றைய உலகின் மோதல்கள், சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு, ஆன்மிக வெற்றிடம் ஆகிய சவால்களில் அமைதி என்பது மனித சாதனை அல்ல; கடவுள் நம்முடன் இருப்பதன் அடையாளம்.”
- ஆகஸ்டு 22 , கிறித்தவ ஒன்றிப்பு
வாரத்தில்
பங்கேற்பாளர்களுக்கான
செய்தி
“நாசரேத் ஊரின் திருகுடும்பத்தைப் பார்ப்பதன் வழியாக, நமது குடும்பத்தின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.”
- ஆகஸ்டு 23, பொதுப்பேரவையில்
பங்கேற்கும்
அருள்சகோதரிகள்
சந்திப்பு
“இயேசுவே நமது நம்பிக்கையின் அளவுகோல், நாம் மீட்கப்படுவதற்கான பாதையும் அவரே; அவருடைய அன்பு, நீதி, அமைதிக்காக உழைப்பவர்களாவோம்.
- ஆகஸ்டு 24, மூவேளைச் செபவுரை