கோவை ஆயரின்
ஆசியுரை
அன்புள்ளம் கொண்ட அருள்பணியாளர்களே! இருபால் துறவியரே! இறைமக்களே! ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே! இறை இயேசுவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் புனித செபமாலை அன்னையின் பெயரால் வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்கிக்கொள்கின்றேன். புனித செபமாலை அன்னை நம்மை அண்டி வருவோருக்கு எல்லாம் ஏராளமான நன்மைகளையும் புதுமைகளையும் வழங்கி வருகிறார். இறைநம்பிக்கையில் நிறைவை அடைய கத்தோலிக்கத் திரு அவையின் தலைமை நமக்குக் கொடுத்துள்ள மிகப்பெரிய கொடை கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்கா, அனைத்து மதத்தினரும் சமய நல்லிணக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அடியெடுத்து வைக்கும் புண்ணிய பூமி. அன்னை மரியாவின் பரிந்துரையை நாடிவருவோரின் வேண்டுதல் நிறைவேறி அன்னையின் வழியாக இயேசுவுக்கு நன்றி செலுத்தும்போது பார்ப்பவரின் உள்ளத்திற்குள் பேரானந்தம் நிழலாடும்.
அக்டோபர்
மாதம் என்றாலே செபமாலை செபிக்கும் மாதமாகும். எனவே, வருகின்ற அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் அன்னையின் பெருவிழாவில் நீங்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு அன்னையின் பரிந்துரை வழியாக இறையாசிரைப் பெற்றுச்செல்ல அன்புடனும் பாசத்துடனும் அழைக்கின்றேன். இறையாசிர்!