இடைக்காட்டூர் திரு இதய ஆண்டவர் திருத்தலத்திற்குப் புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் திருப்பயணம் மேற்கொண்டனர். 2025-இன் யூபிலி ஆண்டு ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படுகிறது. அவ்வகையில் சிவகங்கை மறைமாவட்டத்தில் யூபிலி ஆண்டுக்கான திருப்பயணத் திருத்தலமாக இடைக்காட்டூர் திரு இதய ஆண்டவர் திருத்தலம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.