“சட்டம் என்பது வெறும் பட்டம் பெறுவது மட்டுமல்ல; சட்டத்தின் ஆளுமை பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெறுவதே சட்டக்கல்வியின் உயரிய நோக்கம். விடாமுயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், நிலைப்புத்தன்மை ஆகியவை இக்கால வழக்கறிஞர்களுக்குத் தேவை. இந்திய அரசியல் சாசனம், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான கருவூலமாக உள்ளது. நீதிபரிபாலனச் சமத்துவம், சகோதரத்துவம், நீதிநெறி என்பதே பல வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகத் திகழ்கிறது.”
- உச்ச
நீதிமன்ற
நீதிபதி
கோட்டீஸ்வர்
சிங்
“எந்த
அளவுக்கு அறிவார்ந்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றனவோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் தேவையற்ற குப்பையும் இருக்கின்றன. நாம்தான் குழந்தைகளுக்குச் சரியானதை அடையாளம் காட்ட வேண்டும். எதற்கெடுத்தாலும் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இருக்கின்ற தலைமுறையாக மாணவர்கள் மாறிவிடக்கூடாது. தொழில்நுட்பத்திற்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணர்த்தவேண்டும். அறத்தின் வலிமையையும் நேர்மையின் தேவையையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். பாடப்புத்தகங்களைக் கடந்து, இலக்கியங்களை, பொது அறிவுத் தகவல்களை, சமூக ஒழுக்கத்தை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, காலநிலை மாற்றம் குறித்த தெளிவை, மாற்று எரிசக்திகளின் தேவையைப் பற்றியெல்லாம் புரியவைக்க வேண்டும். கல்வி தொடர்பாகச் செய்யும் பணிகளைத் தாண்டி, மாணவர்களுக்குள்ளே சமத்துவம், சமூகநீதியின் தேவையைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள். மாணவர்களிடம் அடிக்கடி மனதுவிட்டு பேசுங்கள். நூலகங்களையும் வாசிப்புப் பழக்கத்தையும் அறிமுகப்படுத்துங்கள். அதற்கு, ஆசிரியர்கள் முதலில் படித்துக் கொண்டே இருக்கவேண்டும்.”
- உயர்திரு.
மு.க.ஸ்டாலின்,
தமிழ்நாடு
முதலமைச்சர்
“பெண்கள்
குடும்பத்தை மட்டுமே நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் எனக் கூறுவது சரித்திரப் பிழை. பெண் சமுதாயத்திற்கு ஆட்சி புரியவும் தெரியும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியுள்ளனர். பல்வேறு தடைகளைத்தாண்டி இந்தியாவிலேயே முதல் பெண் வழக்கறிஞராகப் பதிவு செய்தவர் கார்னிலியா. அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இந்தச் சமுதாயம் எப்போது பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்கிறதோ, அப்போதுதான் மண்ணும், நாடும் உயரும் என்பது பாரதியின் கூற்று. அதற்கேற்ப பெண்கள் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் மேலோங்கி
வர வேண்டும். சமூகமும்
காலமும் ஒன்றாக நிலைத்து நிற்பதில்லை. ஆகவே, பெண் வழக்கறிஞர்கள் நோக்கமும் செயல்பாடுகளும் அறிவு சார்ந்த வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.”
- உச்ச
நீதிமன்ற
நீதிபதி
ஆர்.
மகாதேவன்