2027-ஆம் ஆண்டு சியோலில் நடைபெறவுள்ள உலகளாவிய இளையோர் மாநாட்டிற்கான தயாரிப்பாக, உலக இளைஞர் ஆண்டு தினம், நவம்பர் 23-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதற்கான கருப்பொருளை வெளியிட்ட திருத்தந்தை, “தூய ஆவியாரின் வல்லமையால் நம்பிக்கையின் திருப்பயணிகளாகவும், கிறிஸ்துவின் துணிவுள்ள சாட்சிகளாகவும் நாம் மாற நம்மையே தயார்படுத்திக் கொள்வோம்” எனக் கேட்டுக்கொண்டார். அதற்கு, “கடவுளிடமிருந்து கொடையாக நாம் பெற்ற இயேசுவுடனான நமது நட்பு மற்றும் சமூகத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நமது அர்ப்பணிப்பு” எனும் இருவகையான சாட்சியங்களை விளக்கியுள்ள திருத்தந்தை, நாம் ஓர் அரசியல் கட்சியின் பணியாளர்களாகவோ அல்லது செயல்பாட்டாளர்களாகவோ இருக்க அவர் விரும்பவில்லை; மாறாக, அவருடைய நண்பர்களாக இருக்க அழைக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.