இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கத்தின் தென் மாநிலங்களின் பிரதிநிதியாக, தமிழ்நாடு கத்தோலிக்க இதழான ‘நம் வாழ்வு’ வார இதழின் முதன்மை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புனேயின்
ஞானதீப கல்விக் கழகத்தின் வளாகத்தில் உள்ள இனிகோ சதனில், இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கத்தின் (ICPA) ஆண்டுப் பொதுக்குழுக்
கூட்டம் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில், புதிய
நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தத்
தேர்தலில் ‘இந்தியன் கரன்ட்ஸ்’
பத்திரிகையின்
மேனாள் ஆசிரியர் அருள்பணி. சுரேஷ் மேத்யூ OFM CAP தலைவராகவும்,
அருள்பணி. ஜோ எருப்பக்காட் SSP துணைத்தலைவராகவும், அருள்சகோதரி டெஸ்ஸி ஜேக்கப் SSPS செயலராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளராக
அருள்பணி. சஜித் சிரியக் SSP, இணைச்
செயலாளராக ரெஞ்சித் லீன், தென் மாநிலங்களின் பிரதிநிதியாக தமிழ்நாடு கத்தோலிக்க இதழான ‘நம் வாழ்வு’ வார இதழின் முதன்மை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் அருள்முனைவர் செ. இராஜசேகரன், வடக்கு மண்டலத்திற்கு அருள்பணி. ப. கௌரவ் நாயர்
மற்றும் மேற்கு மண்டலத்திற்கு ராஜேஷ் கிறிஸ்டியன், நிறுவன உறுப்பினராக ‘தி நியூ லீடர்’ பத்திரிகையின்
ஆசிரியரும் வெளியீட்டாளருமான அருள்பணி. ஆண்டனி பங்கராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தத்
தேர்தல், மூத்த பத்திரிகையாளர் லாரன்ஸ் கோயல்ஹோ தலைமையில் நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் மேனாள் தலைவர் இக்னேஷியஸ் கொன்சால்வஸ் அவர்களுக்குச் சிறப்பாக நன்றி தெரிவித்தனர். இந்த ICPA, கத்தோலிக்க
ஊடக வல்லுநர்களுக்கான ஒருங்கிணைந்த தளம் என்பது குறிப்பிடத்தக்கது.