news-details
தமிழக செய்திகள்
16-வது பொது அவையின் இறுதி ஆவணம் வெளியீடு!

சென்னை-நசரேத்பேட்டையில், 16-வது பொது அவையின் இறுதி ஆவணத்தின் தமிழாக்கம், தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் வெளியிடப்பட்டது. பேராயர் அவர்களின் 20-ஆம்  ஆண்டு ஆயர் திருநிலைப்பாட்டு நிகழ்வில் இந்நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  கத்தோலிக்கத் திரு அவை காலத்தின் அறிகுறிகளைக் கணித்து, தன்னைத்தானே புதுப்பிக்கும் பணியில் கூட்டொருங்கியக்கத் திரு அவையாகத் தன்னை அடையாளப்படுத்துவதற்காக, கருத்துச் செறிவுமிக்க கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தமர்வுகளை உள்ளடக்கிய உலகளாவிய 16-வது ஆயர் மாமன்றமானது, 2023 அக்டோபர் மற்றும் 2024 அக்டோபர் ஆகிய இரண்டு வெவ்வேறு தருணங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆயர் மாமன்றத்தின் சிந்தனைகளை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்ப்பதற்காக, தமிழ்நாடு ஆயர் பேரவையின் ஒப்புதலில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இக்கருத்துச் செறிவுமிக்க ஆவணத்தை, கோவை-நல்லாயன் குருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மொழிபெயர்ப்பு செய்தனர். தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழானநம் வாழ்வுபதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. விலை : ரூ.150/-

தொடர்புக்கு: ‘நம் வாழ்வுபதிப்பகம், 62, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004.

செல்: 94980 32244