news-details
சிறப்புக்கட்டுரை
2026 தேர்தல்: யாருக்கு வாக்கு?

தமிழ்நாட்டு  எதிர்க்கட்சிகள்ஆட்சி மாற்றம்வேண்டும்என்கிறார்கள். மக்களோஆட்சி மாற்றங்களால் எம் வாழ்வில் மாறப்போவது  எதுவுமில்லைஎனத் திருப்பிக் கூறுகிறார்கள். ‘அரசியல் மாற்றம்வேண்டும்; அந்த மாற்று அரசியல் மக்களுக்கான அரசியலாக இருக்கவேண்டும்என்கிற குரல்கள் உயர்கின்றன.

விழிப்புணர்வு பெற்ற மக்கள் கேட்கிறார்கள்: ‘எங்களுக்கு மண்ணுரிமையைப்  பேணி, மாநில  உரிமைகளைக் காக்க வேண்டும்; மதவாதத்தைப் புறந்தள்ளி, சிறுபான்மையோர் நலன், அடிப்படை அரசியல் சாசன உரிமைகள் பேணப்படுதல் கட்டாயமானது; மதவாதம் மறுக்கப்படவேண்டும்; மக்களின் முன்னுரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாநிலத் தாய்மொழிகள், நதிநீர்ப் பிரச்சினை, பொது நுழைவுத் தேர்வுகள், மையப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. போன்ற எல்லாப் பொருள்களுக்கும் சேவை வரி விதிப்புகள்...’ எனக் கோரிக்கைகள் விரிகின்றன.

ஒன்றிய அரசு பா... அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கிறது. மாநில அரசுகளை, உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகள் போல் மாற்றிவிட்டது. மாநில அரசுகளின் அபயக்குரல்கள் தேசமெங்கும் தீயாய்ப் பற்றுகிறது, எல்லா நிலைகளிலும் எதிரும் புதிருமாக இரு துருவ அரசியல் நடத்தும் தி.மு.. மற்றும் .தி.மு.. பங்காளிகள் ஒருமித்தக் குரலில் சொல்கிறார்கள்: “மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை.” ஆம், இதுதான் நடப்பு அரசியல். தமிழ்நாட்டு வாக்காளர்கள் விழிப்புணர்வு பெறுகிற இடமும் இதுதான்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இருவகை கூட்டணிகளால் வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்று, கொள்கைக் கூட்டணி; மற்றொன்று, அரசியல் இலாபங்களை மையப்படுத்திய தேர்தல் கூட்டணி. அது மதவாதக் கூட்டணி. ஆளும் தி.மு..-வைத் தோற்கடிக்க வேண்டும், தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற அதிகார வெறி. அங்குக் கூட்டணி ஆட்சி என்ற மயக்கமும், அதிகாரப் பகிர்வு என்ற பசப்பும் கூடுதலாகக் கூறப்படுகிறது. இது குறித்த ஆசைகள் சிறு கட்சிகளுக்கு விரிக்கப்படும் வலை.

கூட்டணி ஆட்சி குறித்து தமிழ்நாட்டு மக்கள் தெளிவான முடிவுகளைக் கடந்த காலங்களில் வழங்கியுள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் தொங்கு சட்ட சபையையோ, சட்டமன்ற உறுப்பினர்களை  விலைக்கு வாங்கும் பா...வின் குதிரைப் பேரங்களையோ விரும்புவதில்லை.

பா...வின் கூட்டணியில் உள்ள .தி.மு.., பா... போன்ற கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை உணர்வதில்லை. பா...வின் மக்கள் விரோதச் சட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக்கொடுக்கிறார்கள். பொதுச்சிவில் சட்டம், குடியுரிமைச் சட்டம், ‘லவ் ஜிகாத்சட்டம், புதிய கல்விக்கொள்கை என்பவைகளில் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ‘தி.மு.. ஆட்சி எதிர்ப்புஎன்ற ஒற்றைக் குரலில் ஒன்று  சேர்கிறார்கள். தமிழ்நாட் டில் என்.டி.. கூட்டணி ஆட்சி  எனப் பிரகடனம் செய்கிறார்கள். தி.மு.. எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில், புதிய கூட்டணியைக் கட்டமைக்கிறார்கள். அன்புமணி உட்பட இவர்கள், தங்கள் கட்சிகளின் சமூக ஊடகப் பிரிவிற்குத் தி.மு.. எதிர்ப்பு என்ற வெறியை மக்களிடம் தீவிரப்படுத்தக் கட்டளை போடுகிறார்கள். கூட்டணி ஆட்சி அதிகாரம் என்ற போதை இவ்வாறு செய்ய பணிக்கிறது.

கடந்த கால வரலாறு கூறுகிறது. 1980-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் சரிபாதி இடங்கள், ஆட்சியில் பங்கு என்ற தி.மு..வுடன் காங்கிரஸ் அமைத்த கூட்டணி தோற்றது.

2016-இல் மாற்று அரசியலென நடிகர் விஜயகாந்த் முதல்வர் என்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் மூன்றாவது அணி படுதோல்வியைத் தழுவியது. பா... மற்ற மாநிலங்களைப்போல கூட்டணி ஆட்சி என்ற பெயரில் .தி.மு..-வைக் கபளிகரம் செய்து முடித்து கட்ட முயல்கிறது.

.தி.மு.. எனும் கட்சி பா...வின் கள்ளத்தனம்  அறிந்தும் உணர மறுக்கிறது. தேர்தல் முடிவுகளில் .தி.மு.. இதற்காகப் பெரும் விலை தரவேண்டும் என்ற உண்மை கசக்கிறது. மோடி ஆட்சி குறித்து விளம்பரப்படுத்த விவேகானந்தர் விழிப்புணர்வுக் குழுவை ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ளது. .தி.மு..-வில் எடப்பாடிக்கு அடுத்த  நிலை உள்ள எஸ்.பி. வேலுமணியின் சகோதரர் எஸ். அன்பரசன் அக்குழு உறுப்பினர் எழுவரில் ஒருவர். நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி, மற்றொருவர் துணைக் குடியரசுத் தலைவராகும் சி.பி. இராதாகிருஷ்ணன் மகள் ஹரி இராதாகிருஷ்ணன், எஸ்.பி அன்பரசன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கோயம்புத்தூர் வருகையில் உடன் இருந்தார் என்பதும் கூடுதல் தகவல். இவ்வாறாக .தி.மு.. தனது பா.. நிலையில் இருந்து மேலேறி, ஆர்.எஸ்.எஸ். வரை உறுதியாகப் பற்றிக்கொண்டது.

ஜூன் 22-இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 37 பிரிவுகள் நடத்திய மதுரை முருகன் மாநாட்டில், .தி.மு..-வின் நான்கு முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மதுரை முருகன் மாநாட்டில் 4,000 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், நுண் மேலாண்மை முறையில் செயல்பட்டார்கள். 1,200 ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சி பெற்றவர்கள் காவல்துறையில் வேலை பார்த்தனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்யூடியூப்பர்கள் 179 பேர் மாநாட்டை நேரடியாக ஒலி-ஒளி பரப்பினர். 2026, தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாத முதல் பிரச்சாரத்தில் .தி.மு.. வும் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் அடையாளமாக பொது அமைதி, மத மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் கொண்டவர்கள். தமது  அரசியல், பொருளாதாரம், கல்வி, பண்பாடு, கலாச்சாரம். வரலாற்றுப் பண்புகளை மேன்மை கொள்வதில் மிளிர்பவர்கள். சமீபத்தில் தமிழரின் மொழி மற்றும் கலாச்சாரத் தொன்மையை உலகிற்குக் கூறிய கீழடி ஆய்வைக் கேள்விக்குறியாக்கிய ஒன்றிய அரசுமீது பெருங்கோபம் கொண்டவர்கள். வாக்களிக்கும் முறையில் தெளிவும் விழிப்புணர்வும் பெற்று ஓரணியில் திரள்பவர்கள். தேர்தல் கள நிலவரங்கள், கருத்துக் கணிப்புகள், ‘இந்தியாகூட்டணி 40 முதல் 45 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகளை வெற்றிவாக்குகளைச் சிறுபான்மையினக் கிறித்தவ, இஸ்லாமிய மக்களே அளிப்பவர்கள். சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட அவர்களின் பிரதிநிதிகளைச் சட்டமன்றத் தேர்தல்களில்இந்தியாகூட்டணி நிறுத்த வேண்டும். கடந்த 2024 தேர்தலின்போது .தி.மு..வுக்கு ஆதரவளித்த எஸ்.டி.பி.. இஸ்லாமிய அமைப்பும், .தி.மு..வைத் தள்ளி வைத்துவிட்டது. சமீபத்தில் புகழ்பெற்ற கேரள பாப் பாடகர் தமிழர் வேடன் கூறுவதுபோலதம்புரான் என்றால் எனக்கு ஓர் இதுவும் இல்லைஎன்பதே பா... குறித்து தமிழ்நாட்டு மக்களின் பார்வையாக உள்ளது.

மதவாதம் தமிழ்நாட்டில் தலையெடுக்காமல் இருக்க தமிழர்கள் தங்கள் வாக்குச் சக்தியை எதிர்நிலையில் ஓரணியாகக் காட்டுவார்கள். மதவாதிகளையும்அவர்களுக்குத் துணை செல்பவர்களையும் அடையாளம் காண்பர். இதுவே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும். எதிரொலிக்கும்.