news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (19.10.2025)

தகவல் தொடர்பில் மனிதக்குரலும் திறனும் முக்கியம்; செயற்கை நுண்ணறிவால் நெறிமுறையையும் பொறுப்பையும் மாற்ற முடியாது.”

- செப் 30, 60-வது உலகத் தகவல் சமூகத் தொடர்பு நாளுக்கான செய்தி

உயிர்த்தெழுந்த இயேசுவின் அமைதி, அன்பு மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் மூலம் மனிதர்கள் நல்லிணக்கத்தின் சாட்சிகளாக அழைக்கப்படுகின்றனர்.”

- அக் 1, புதன் மறைக்கல்வி உரை

மதங்கள் இடைவெளிகளை நீக்கும் பாலங்களாக மாறி, மனித ஒற்றுமை, அமைதி மற்றும் நீதியை நிலைநிறுத்துவதற்கு உறுதி செய்யட்டும்.”

- அக் 2, பல்வேறு மத மரபுகளுக்கு இடையிலான ஒருமைப்பாட்டு செப உரை

இரக்கம், நேர்மை, ஒற்றுமை, மரியாதை ஆகியவை ஒருமித்த அன்பு வாழ்க்கையின் அடித்தளங்கள் ஆகும்.”

- அக் 3, புதிய சுவிஸ் காவலர்கள் பணியேற்பு

யூபிலி - நம் இதயங்களை மாறச் செய்து, மன்னிப்பில் புதிய தொடக்கத்திற்கு நம்பிக்கையை வழங்கும் காலமாகும்.”

- அக் 4, யூபிலி சிறப்பு மறைக்கல்வி உரை

நம்பிக்கை, இரக்கம், ஒன்றிப்பு மூலம் கிறிஸ்துவின் மீட்பில் நாம் ஒவ்வொருவரும் பங்கெடுக்க அழைக்கப்படுகிறோம்.”

- அக் 5, புலம்பெயர்ந்தோருக்கான யூபிலி சிறப்புத் திருப்பலி