news-details
சிறப்புக்கட்டுரை
ASMR மனிதர்கள் (வலையும் வாழ்வும் – 31)

மனைவி, பிள்ளைகளிடம் இப்போதெல்லாம் நான் சிரித்துப் பேசுவதில்லை. தன்னையே மறந்து எப்போதும் சிரித்தபடியே சுற்றித்திரியும் மனநோயாளியைப் பார்க்கும்போது கூட எனக்குப் பொறாமையாக இருக்கிறதுசிறகொடிந்திருந்த பறவையைப்போல ஒரே இடத்திலேயே பல மணிநேரம் அசையாமல் அமர்ந்திருந்தேன்.

என் மனைவி அடிக்கடிஏன் இப்படி இருக்கீங்க? என்னதான் ஆச்சு?’ என்று பலமுறை கேட்டுவிட்டாள். நான் பரிட்சைக்குப் பதில் தெரியாமல் முழிக்கும் சிறு குழந்தைபோல நின்றுகொண்டிருந்தேன்.

சிறு வயதிலிருந்து பழகிய நண்பன் சந்துரு. சில ஆண்டுகளுக்கு முன்பாகஎனக்கு ஹார்ட் பிராப்ளம், ஆப்ரேஷன் பண்ணணும் என்று வந்து நின்றவனுக்கு ஆபீசில் லோன் போட்டு இரண்டு இலட்சம் ரூபாயை எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுத்திருந்தேன். சில நாள்களுக்குப் பிறகு பிசினஸ் பண்ண பணம் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதால் வேறு வழியில்லாமல் அப்பணத்தைத் திருப்பித் தரும்படி அவனிடம் கேட்டேன். ‘இதோ இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று கூறிக்கொண்டே ஆறு மாதங்களாக என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான். இதனால் படியேறி வந்த பிசினஸ் வாய்ப்பு கைநழுவிச் சென்றது.

கோபத்தை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று தெரியவில்லை. அவனிடமும் நேரடியாகச் சென்று கேட்க மனம் விரும்பவில்லை. இனிமேல் அவனிடம் பேசவும் வேண்டாம், அந்தப் பணத்தைக் கேட்கவும் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று மொட்டை போட்டுக்கொண்டு வந்தது என் மனைவி, பிள்ளைகளுக்கு இன்னும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.

ஏமாற்றம் என்பது ஒரு நோய். ஏமாற்றப்பட்டவர்களுக்கே அந்த நோயின் வலி புரியும். நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்று நினைக்கும்போது நிலைகுலைந்து போனேன்.

ஆண்டுகள் பல ஓடின. என்னதான் காலம் புரண்டு படுத்தாலும் மனத்திலே வெறுமையும் வெறுப்புமே மிஞ்சியிருந்தது.

ஒருநாள் ஆபீஸ் கிளம்பலாம் என்று தயாரானபோது, என் நண்பனின் மகன் வீட்டிற்கு வந்திருந்தான். முன்பு பார்த்ததைவிட இப்போது நன்கு வளர்ந்திருந்தான் அவன். ‘எப்படி இருக்கீங்க அங்கிள்?’ என்று நலம் விசாரித்தான். நான் தலையை மட்டும் அசைத்தேன். அவனை உட்காரச் சொல்லிவிட்டு ஒரு டம்ளர் காபி கொடுத்தாள் என் மனைவி. அவனும் அதை மெதுவாகக் குடித்து முடித்துவிட்டு, தன் தோள்பையிலிருந்து சில பணக் கட்டுகளை எடுத்து என்னிடம் கொடுத்தான். நானும் வாங்கிக்கொண்டேன். ‘நான்கு இலட்சம் இருக்கு அங்கிள். லேட்டா கொடுத்ததற்குச் சாரி அங்கிள் என்றான். இரண்டு இலட்சம்தானே கொடுத்திருந்தேன், சாரி எல்லாம் எதற்கு?’ என்று கூறுவதற்கு வாயெடுப்பதற்கு முன்பே, ‘சரி அங்கிள், நான் கிளம்புகிறேன் என்று சொல்லி வேகவேகமாக வெளியேறினான் சந்துருவின் மகன். ‘சந்துரு எப்படி இருக்கிறான்?’ என்று கேட்பதற்குக்கூட நான் நினைக்கவில்லை. என் உள்ளம் ஏன் இப்படிக் கல்லாய் போனதுநண்பர்கள் தேவையில் இருக்கும்போது உதவுவதே உண்மையான நட்பு என்பது போல, என் நண்பனின் உதவி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்தப் பணம் இருந்ததால் என் மூத்த மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க முடிந்தது.

சந்துருவை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று என் மனைவி அடிக்கடிச் சொல்வாள். நான் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

காலங்கள் உருண்டோடின. என் மகள் படித்து பட்டதாரியானாள். பழைய கோபங்கள் பழைய நோட்டுப் புத்தக எழுத்துகள் போல மங்கிப் போயிருந்தன.

சந்துருவைச் சந்தித்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்து அவனுடைய சொந்த ஊரான வள்ளியூருக்குச் சென்றேன். அங்கிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அவன் குடும்பத்தோடு திருநெல்வேலிக்குக் குடிபெயர்ந்து விட்டான் என்று அறிந்து, அவனைத் தேடி திருநெல்வேலிக்குச் சென்றேன். ஒருவழியாக பல போராட்டங்களுக்கிடையில் சந்துருவின் வீட்டைக் கண்டுபிடித்தேன். அவனிடம் என்ன பேச வேண்டும், எப்படிப் பேசவேண்டும் என்றெல்லாம் பல கேள்விகள் உள்ளத்திலே ஊசலாடிக் கொண்டிருந்தன. அவன் கொடுத்த பணத்திற்காக அவனுக்கு நன்றிசொல்லிடவேண்டும் என்பது மட்டும்தான் மனத்திலே இருந்தது. காலிங்பெல் அடித்தவுடன் யாரோ ஒருவர் கதவைத் திறக்க, முதலில் தெரிந்தது மாலையணிவித்த நிலையில் இருந்த என் நண்பனின் புகைப்படம்தான். சந்துரு இறந்து நான்கு ஆண்டுகள் கழிந்திருந்தன.

காலம் கடந்து சொல்லப்படும் நன்றி, நன்றியற்றதற்குச் சமம்.’

ஒருவன் பிரச்சினையில் இருக்கிறான் என்றால், அவனுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் என்று அனைவரும் உதவிசெய்ய முன்வரவேண்டும். அதுவே அவனுக்குப் பிரச்சினைகளே இல்லை என்றால், அவன் யாரையும் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. அவன், அவனுடைய குடும்பம் என்று சுயநலவாதியாகிவிடுகிறான். குடும்பத்தின் பாசவளையத்திற்குள்ளேயே நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறான்.

சிலர் குடும்பத்தைப் பற்றிக்கூட அக்கறைப்படுவதில்லை. சமூக ஊடகங்கள் வந்த பிறகு சமூக ஊடகங்கள் தருகின்ற போதையில் பலரும் மிதக்கின்றனர். கிணற்றுத்தவளைபோல தான் கண்டதே உலகம் என்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்துவதுபோல சமூக ஊடகங்களில் பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ASMR (Autonomous Sensory Meridian Response) காணொளிகள்.

இத்தகைய காணொளிகள் பார்வையாளர்களின் புலன்களுக்கு ஒருவிதமான கிளர்ச்சியை ஏற்படுத்துவதோடு, இதமான உணர்வைத் தூண்டியெழுப்புகின்றன. எடுத்துக்காட்டாக முடிவெட்டுவது, புற்களை வெட்டுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, காகிதத்தை மெதுவாகக் கிழிப்பது, பலூன்களில் தண்ணீர் நிரப்பி, அதனைஸ்லோ மோசனில் உடையச் செய்வது.

யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் வரும் இவ்வகை .எஸ்.எம்.ஆர். காணொளிகள் மன அழுத்தத்தைக் குறைத்து மனத்தை ஆற்றுப்படுத்துகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வகை, காணொளிகள் உடல் முழுவதும் செயல்படும் நரம்பூக்கிகளான (neurohormones) டோபமைன் (மகிழ்ச்சி ஹார்மோன்), ஆக்ஸிடோசின் (காதல் ஹார்மோன்), மற்றும் எண்டோர்பின்கள் (வலி நிவாரணி) ஆகியவைகளை விழித்தெழச்செய்து மனத்தைக் குளிர்விக்கின்றன எனலாம்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அதிகளவில் நுகரப்படும் .எஸ்.எம்.ஆர். காணொளிகள் பல்வேறு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகளையும் வருவிக்கின்றன. குறிப்பாக, .எஸ்.எம்.ஆர். காணொளிகள் அதிகளவில் பார்க்கப்படுவதால் தூக்கமின்மை, நேரவிரயம், போதை மயக்கத்தில் திளைத்திருப்பது போன்ற உணர்வு, பதற்றம், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

அமைதியையும் ஆறுதலையும் ஒருவர் மற்றவரின் சிரிப்பில் கண்டு அனுபவிப்பதே உச்சக்கட்ட இன்பம் எனலாம்.                      

(தொடரும்)