இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் அமைப்பின் (Indian Catholic Press Association) 30-வது தேசிய மாநாடு புனே நகரின் ஞானதீப கல்விக்கூடத்தில் உள்ள இனிகோ சதன் அரங்கத்தில் கடந்த மூன்று நாள்களாக (செப். 19-21) நடைபெற்றது.
இந்த
மாநாட்டில், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும், உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் சமூக, ஆன்மிக, அரசியல் மற்றும் வாழ்வியல் வழிகாட்டியாக விழிப்புணர்வு வழங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் தனிப்பெரும் வார இதழான ‘நம் வாழ்வு’ இதழின் சிறப்பான பணிகளைப் பாராட்டி இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகை அமைப்பு சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இவ்விருதினை
அமராவதி மறைமாவட்ட ஆயர் மேதகு மால்கம் செக்கியூரா, ICPA-இன்
இந்திய ஆயர் பேரவை ஆலோசகர் மேதகு ஹென்றி டி’சூசா அவர்களும், ICPA-இன்
தலைவர் உயர்திரு. இக்னேசியஸ் கொன்சால்வா அவர்களும் வழங்க, ‘நம் வாழ்வு’ வார இதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் பெற்றுக்கொண்டார்.
இவ்விருதைப்
பெற்றுக்கொண்ட அருள்முனைவர் இராஜசேகரன் அவர்கள், தமிழ்நாடு ஆயர் பேரவையின் மேனாள் மற்றும் இந்நாள் ஆயர் பெருமக்களுக்கும், முதன்மை ஆசிரியர்களுக்கும் துணை ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மற்றும் சந்தாதாரர்களுக்கும் இவ்விருதினை அர்ப்பணிப்பதாகக் குறிப்பிட்டார்.