news-details
தமிழக செய்திகள்
மாற்றம் நோக்கி... 100 கருத்தாளர்கள்! (தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் முன்னெடுப்பு!)

மாற்றம் நோக்கி 100 கருத்தாளர்கள்என்கிற இலக்கோடு இளைஞர்களைக் கருத்தாளர்களாக உருவாக்கும் திட்டத்தின் இரண்டாவது நேரடி அமர்வு Sisters of Charity (SCCG) சபையின் தென் கிழக்கு இந்திய மாகாணத்தின் தலைமையகமான திருச்சி மரியகத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றன. இந்தப் பயிற்சியில் தமிழ்நாட்டிலிருந்து 36 இளையோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இலக்குப் பாடலானபொது இலக்கு கனவெடுத்துஎனும் பாடலுடன் தொடக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

முதல் அமர்வில்அம்பேத்கரின் பார்வையில் சமூக நீதிஎன்ற தலைப்பில் புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியரான பணி. . செகன் போசு கருத்துரை வழங்கினார். அவர் தனது உரையில்சமூக நன்மை (சமூக நீதி) என்பது இரக்கம் சார்ந்தது அல்ல; அது உரிமை சார்ந்தது. மேலும், இது தனிமனிதனின் பொறுப்பல்ல, அரசின் கடமைஎன்று கூறினார். மற்றோர் அமர்வில், ‘பூவுலகின் நண்பர்கள்இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், அவர்களோடு இணைந்து இளைஞர்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இயக்கத்தின் இயக்குநரான பணி. கு.. எடிசன், ‘சாதியற்ற தமிழ்ச் சமூகம், சாதியத் தமிழ்ச்சமூகம்என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் எவ்வாறு சாதி ஊடுருவியது என்றும், சாதியற்ற தமிழ்ச் சமூகம் எவ்வாறு இருந்தது என்றும் இன்றைய அவல நிலை குறித்தும் எடுத்துரைத்தார்.

இரண்டாம் நாள் அமர்வில், ‘காவிமயமாகும் நீதித்துறைஎனும் தலைப்பில் வழக்கறிஞரான அருள்பணி. சவரிமுத்து கருத்துரை வழங்கினார். அவர் தனது உரையில், இன்றைய சூழலில் மக்களின் கடைசி நம்பிக்கையான நீதித்துறை எவ்வாறு மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு எதிராகச் செயல்படுகிறது என்பது பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்து, அதனை உயர்த்திப் பிடிப்பதற்கான தேவை பற்றியும் எடுத்துரைத்தார். சிறந்த கருத்தாளர்களாக உருவாக வேண்டுமெனில் தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்கவேண்டும் என்ற கருத்தும் இந்தப் பயிற்சிப் பாசறையில் வலியுறுத்தப்பட்டது.