ரோபோக்களின் ஆதிக்கம்
ரோபோ
விஞ்ஞானம் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், வருங்காலத்தில் மனிதருக்குப் பதிலாக ரோபோக்கள் பயன்படுத்தலாம்.
பிற கிரகங்கள்
செவ்வாய்
கிரகத்தில் ஆய்வுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருப்பது, பிற கிரகங்களான வியாழன், சனியின் நிலவுகள், பிற விண்வெளி சஞ்சாரிகளுடன் தொடர்பு (celestial
object) பயணம் மேற்கொள்ள சாத்தியப்படலாம்.
தனியார் துறை
இதுவரை
அரசுகளே விண்வெளிப் பயணத்தை முன்னெடுத்துச் சென்ற நிலைமாறி, தனியாரின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, Space, blue
origin, virgin galactic
என்பவைகள்.
விண்வெளிப் பயணச்
செலவு
விஞ்ஞான
வளர்ச்சியின் பயனாக விண்கலங்கள் தயாரிப்பு, இராக்கெட், கருவிகள் குறைந்த விலையில் கிடைப்பது விண்வெளிப் பயணத்தை எளிதாக்குவது மட்டுமன்றி, ஏற்றத் திட்டங்களைத் தீட்ட உதாரணமாக, விண்வெளி சுற்றுலா போன்று உதவிடும் என்று கருதப்படுகிறது.
உலகளாவியக் கூட்டுமுயற்சி
இப்போது
பல நாடுகள் தங்கள் விண்வெளிக் கலங்களுக்குப் பிற நாடுகளின் தளங்களைப் பயன்படுத்துகின்றன. அதேபோன்று விண்ணில் தளங்களும் கூட்டாக அமைத்துப் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
ஏஐ-யின்
தொழில்நுட்பம்
விண்வெளி
ஆராய்ச்சியில் ஏஐ- யின் பங்களிப்பு பல துறைகளிலிருக்கும் என்பதில் ஐயமில்லை.
விண்வெளி யாருக்குச்
சொந்தம்?
‘விண்வெளி’
என்பதற்கு அதிகாரப்பூர்வமான எந்த வரையறையும் இல்லை. ஒருவேளை ஐக்கிய நாடுகள் சபை ஆலோசிக்கும் பூமிக்கு மேலே 100 கி.மீ. அப்பால்
கரமான் கோடு என்கிற எல்லையிலிருந்து விண்வெளி என்று அடையாளப்படுத்த வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. இன்று பூமியிலிருக்கும் நமக்கு ஒவ்வொரு நொடியும் விண்வெளியைச் சார்ந்தேயிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவருடன் தொலைத்தொடர்பு, பணப்பரிமாற்றம் அல்லது கூகுள் தேடுதல் என்பனவெல்லாம் செயற்கைக் கோள்களை நம்பியே உள்ளன. நாடுகளுக்கிடையே ஏற்படும் போரின்போது செயற்கைக்கோள்கள் இரையாகலாம்.
ஒருவேளை
போரின் முக்கியமான இடம் விண்வெளியாகக்கூட மாறலாம். ஏனென்றால், சில நாடுகள் இராணுவச் செயற்கைக்கோள்களை இரகசியமாக விண்வெளியில் அமர்த்தியுள்ளன. உலக வரலாற்றில் முதல்முறையாக மனிதன் விண்வெளிக்குச் சென்று அங்கு நிலவில் கால்பதித்த பெருமை நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற அமெரிக்கரைச் சாரும் என்பதும், அவர் அமெரிக்க நாட்டின் கொடியை 1969-ஆம் ஆண்டு நிறுத்தினார் என்பதும் வரலாறு.
1967-ஆம் ஆண்டின்
ஐக்கிய நாட்டின் விண்வெளி ஒப்பந்தத்தின்படி இது உரிமையை அல்ல, அடையாளமாகவே கருதப்படுகிறது. உலக ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்வெளி ஒப்பந்தம் நடைமுறையில உள்ளது. அதன்படி அனைத்து உலக நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சி செய்யலாம். அது அமைதிக்கென்று இருக்கவேண்டும். விண்வெளியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. விண்வெளி வீரர்கள், பூமியின் தூதர்கள், விண்வெளியில் அணு மற்றும் எந்த ஆயுதங்களையும் வைக்க அனுமதி இல்லை. விண் பொருள்களை அமைதிக்காகப் பயன்படுத்த வேண்டும். விண்வெளியில் ஏற்படும் சேதங்களுக்கு அந்த நாடே பொறுப்பேற்க வேண்டும். எந்த ஓர் ஆய்வும் அனைத்து
நாடுகளுக்கும் பயனளிப்பதாய் இருக்க வேண்டும். விண்பகுதி மனித இனத்திற்குச் சொந்தமானது.
50 ஆண்டுகளுக்குப்பின் சந்திரன் மீது
திடீர்
மோகம்
ஏன்?
1957-ஆம் ஆண்டு
விண்வெளி ஆராய்ச்சியைத் தொடங்கி 1969-ஆம் ஆண்டு நிலவில் மனிதன் கால்பதித்து 50 ஆண்டுகளாகின்றன. அப்பொல்லோ 17, 1972 விண்வெளிப் பயணத்திற்குப் பின், கடந்த பல ஆண்டுகளாக விண்வெளிப்
பயணங்கள் தொடரவில்லை.
இந்த
இடைவெளி, நிதி மற்றும் அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம். ஆனால், விஞ்ஞான, தொழில்நுட்பப் பின்னணி இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களில் சீனா, இந்தியா போன்ற நாடுகள் ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் சந்திரனில் இறங்கிச் சாதனை செய்தன. இதனிடையே இரஷ்யாவின் லூனா 25, இஸ்ரயேலின் பெரஷீட், ஜப்பானின் விண் ஊர்திகள் சந்திரனில் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பொதுவாக
சந்திரனில் ஏற்ற வாயுமண்டலம் இல்லையென்றும், பூமியை ஒப்பிடும்போது 1/6 அளவு புவிஈர்ப்பு உள்ளதாகவும் மற்றும் சந்திரனில் +121, -133 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருப்பதாகவும் அறியப்படுகிறது. செவ்வாய்கிரகத்தில் விண் ஊர்தி இலக்குகளுக்குப் பறந்து சென்று, பாராசூட் மூலம் நிற்கமுடியும். ஆனால், சந்திரனில் தரை இறங்குவது இயந்திரத்தின் துணையுடன்தான் முடிகிறது.
இச்சூழலில்
மீண்டும் செவ்வாய் கிரகத்தில் மனிதனை இறக்க இது ஒரு பயிற்சித்தளமாக அமையும் என்றும் பார்க்கப்படுகிறது. சந்திர - விண்வெளி ஆராய்ச்சியின் பயனாகப் பல்லாயிரக்கணக்கில் வேலைவாய்ப்பை உண்டு பண்ணும் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, குறிப்பாக ரோபோ, தானியங்கி போன்ற பிரிவுகளில் உந்துசக்தியாயிருக்குமென்றும்
கருதப்படுகிறது.
(தொடரும்)