வத்திக்கான் திருப்பீடத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் சேர விரும்பும் பொதுநிலையினர் ‘work with us’ என்ற வலைதளப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அதன் பொருளாதாரச் செயலகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் ஆர்வம் உள்ள தகுதியானவர்களுக்கு இந்த வலைதளப்பக்கம் பயனுள்ளதாக அமையும். திருப்பீடமும் சரியான ஆள்களைத் தேர்வு செய்ய இந்த முயற்சி உதவும்.
இது
குறித்துப் பொருளாதாரச் செயலகத்தின் தலைவர் மாக்சிமினோ கபல்லெரோ லெடோ பேசும்போது, “பொருளாதாரச் சீர்திருத்தத்தைப் பொருத்தவரை அதில் முக்கியமானது பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது மற்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுபோல இதை அவ்வளவு எளிதாகச் செயல்படுத்த முடியாது. மிகவும் சிக்கலான சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்று. திருப்பீடத்தின் பணிக்காக ஒருவரைத் தேர்வு செய்யும்போது, அவர் திறமைமிக்கவராகவும், தீவிர ஈடுபாட்டுடன் பணியாற்றுபவராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக அறநெறி மதிப்பீடு கொண்டவராகவும் இருக்க வேண்டும்”
என்றார்.