பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோஸ் செபாஸ்டியன் தன்னுடைய மறைமாவட்டத் துறவிகள் நம்பிக்கை, அன்பு மற்றும் இறைப்பணியில் நிலைத்து நிற்க அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் தனது மறைமாவட்டத் துறவிகளைச் சந்தித்த ஆயர், ஆபிரகாம் மற்றும் இயேசுவின் வாழ்க்கையைச் சுட்டிக்காட்டி இவ்வழைப்பை விடுத்துள்ளார்.
இன்றைய
சூழலில், துறவியர்கள் உலகத்தின் ஈர்ப்புகள், பணிபுரியும் நிறுவனங்களின் அழுத்தங்கள் மற்றும் தங்கள் சொந்த நம்பிக்கையில் சோர்வுகள் ஏற்படும்போது, கடவுளின் வாக்குறுதியில் ஆபிரகாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்ததுபோல இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
துறவியர்களிடையே
குறைந்துவரும் நம்பிக்கை, தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வுகள், ஆன்மிக நலனைவிட தனிப்பட்ட நலனுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் ஆகியவற்றை வேதனையோடு சுட்டிக்காட்டிய ஆயர், இயேசு கிறிஸ்துவின் மீதான நமக்குள்ள அன்புதான் திரு அவைக்கு நாம் செய்யும் பணியின் அடித்தளம் என்றும், அவரின் அன்புக்கு நம்மையே நாம் அர்ப்பணிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.