“நமது ஏமாற்றத்திலும் இருளிலும் கூட, உயிர்த்தெழுந்த இயேசு நம்முடன் நடந்துகொண்டிருக்கிறார்.”
- அக். 8, புதன் மறைக்கல்வி
உரை
“திருமுழுக்குப் பெற்ற அனைவரும் திரு அவையின் ஒருமைப்பாட்டில் கேட்டுப் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.”
- அக். 9, அருள்தந்தை தோம்
மேத்தியோ
ஃபெராரி
(GSO)
அவர்களுக்கு வாழ்த்துச்செய்தி
“மக்களுடன் இணைந்து பயணிக்கும் கேட்கும் பகிரும் பரிசோதிக்கும் திரு அவையை உருவாக்குவோம்.”
- அக். 11, திருப்பயணிகளுக்கான
செய்தி
“இறைவனுடனான உள்ளார்ந்த உறவு மனிதகுல ஒற்றுமைக்கும் திரு அவையின் புனிதத்திற்கும் அடித்தளமாக அமைகிறது.”
- அக். 11, துறவறத்தாருக்கான
யூபிலிச்
சந்திப்பு
“மரியன்னையின் மீதான ஆன்மிகம் இயேசுவை மையமாகக் கொண்டு, நம்மை உயிர்த்தெழுதலின் வழியில் புதுப்பிக்கிறது.”
- அக் 12, மரியன்னை ஆன்மிகத்தாருக்கான
யூபிலி
சிறப்புத்
திருப்பலி
“துன்புறுவோருடன் கடவுள் என்றும் இருக்கிறார்; மன்னிப்பு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மனிதகுலத்தின் தற்போதைய தேவை.”
- அக் 12, மூவேளைச் செப
உரை