“எழுத்தாளருக்கும் சாதாரண மனிதனுக்கும் வேறுபாடு இருக்கிறது. சாதாரண மனிதர்கள் எல்லாச் செய்திகளையும் உற்றுநோக்குவது கிடையாது. ஆனால், எழுத்தாளர் அனைத்துச் செய்திகளையும் உற்றுநோக்குகிறார். பார்க்கும் பார்வைதான் வித்தியாசப்படுகிறது. சாதாரண மனிதர்கள் சாதாரணமாக வாழ்ந்து இறக்கிறார்கள். ஆனால் படைப்பாளர்கள் இறந்த பிறகும், தங்களது படைப்புகளின் வாயிலாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எழுத்திற்கு மிகப்பெரிய வலிமை இருக்கிறது. நல்ல புத்தகங்களை நேசிக்கவேண்டும்; அது மனமகிழ்ச்சியைக் கொடுக்கும். தற்போதைய தலைமுறையினருக்குப் படிப்பு, பணம், சமூக நிலை இருக்கிறது. ஆனால், மன அமைதி இல்லை. அதிக நபர்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றனர். இதனால் தெளிவும் தன்னம்பிக்கையும் கொண்ட தலைமுறைகளைப் படைப்பாளர்களால்தான் உருவாக்க முடியும்.”
நீதிபதி வெ.
இராமசுப்பிரமணியன்
“பா.ச.க.வின் அரசியல் முகவராகத் தேர்தல் ஆணையம் மாறியிருக்கிறது. பீகாரில் 65 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய, பட்டியலின, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இளைஞர்கள், இது பா.ச.க.வின் வெற்றிக்காகத் தேர்தல் ஆணையத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு மையங்களின் சி.சி.டி.வி. தகவல் சேகரிப்பு நீக்கம் பா.ச.க.வின் தேர்தல் மோசடியை உறுதி செய்கிறது!”
திரு. எம்.ஏ.
பேபி,
இந்தியப்
பொதுவுடைமைக்
கட்சியின் பொதுச்செயலர்
“தமிழ்நாடு அரசு எந்தவொரு வழக்கையும் விசாரிக்கவில்லை எனக் கூறி அனைத்து வழக்குகளையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளுமா? தமிழ்நாடு அரசு விசாரணை மேற்கொள்ளும் எந்த வழக்கிலும் அமலாக்கத் துறை தலையிடுவதும் விசாரிப்பதும் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாக அமையாதா?”
உச்ச நீதிமன்றம்
“சமூகத்தில் சாதியக் கொலைகள், அத்துமீறல்களைச் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் உள்ளது. அதற்குச் சமூக உணர்வுடன் பணியாற்றும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது.”
திருமதி. பி.எஸ்.
அஜிதா,
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்