news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (12.10.2025)

மறைக்கல்வி என்பது தனித்துவம் மற்றும் முரண்பாடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் பயண வழிகாட்டிப் புத்தகம். இது முழு கத்தோலிக்கத்  திரு அவையின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.”

செப்டம்பர் 28, மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி திருப்பலி

கடவுளின் வார்த்தையைக் கேட்பதிலும் குழு செபத்திலும் வேரூன்ற முயற்சி செய்யுங்கள்; இதன் வழியாக, கிறித்தவச் சான்று வாழ்வின் ஆற்றலையும் ஒளியையும் காண்பீர்கள்.”

செப்டம்பர் 27. யூபிலி மறைக்கல்வி உரை

படைப்பின் மீதான நமது அக்கறையானது நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தின் வெளிப்பாடாக அமைகின்றது.”

செப்டம்பர் 25. வலைதளப் பதிவு

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் எளியவர்களின் குரலாக இருப்பது ஒவ்வொரு கிறித்தவரின் வாழ்க்கை மற்றும் பணியின் அடிப்படை அம்சம்.”

செப்டம்பர் 25 திருப்பீடச் சார்பு இதழின் 175-ஆம் ஆண்டு  வாழ்த்துச் செய்தி

இயேசுவுடனான நட்புறவு மகிழ்ச்சியின் அடிப்படையாகவும், துன்பம் மற்றும் சோதனை காலங்களில் ஆறுதலாகவும் இருக்கட்டும்.”

செப்டம்பர் 24, மறைக்கல்வி உரை

உரையாடல் மற்றும் நட்புறவின் பாதை சவாலானதாக இருக்கலாம்; ஆனால், அது அமைதியின் விலைமதிப்பற்ற பலனைத் தருகிறது.”

செப்டம்பர் 22, இந்தோனேஷியா மக்களுடன் சந்திப்பு