வத்திக்கானில் பொதுப்பார்வையாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை லியோ, “கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பு மிக ஆழமும், முழுமையான தியாகமும் கொண்டது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தந்தையின் அன்பிற்குச் சாட்சியாக விளங்கும் கிறிஸ்துவின் இந்த வழிமுறை கடந்த காலத்துடன் மட்டுமல்ல, இன்றும் பொருந்திச் செல்கிறது. நமது கடந்த கால இரவுகளோ அல்லது பழமையான தவறுகளோ, உடைந்து போன பிணைப்புகளோ, அது எதுவாக இருந்தாலும் அவருடைய மீட்பில் இருந்து எதையும் நாம் விலக்கி வைக்கமுடியாது. கடவுளின் கருணையால் தொட முடியாத அளவுக்கு அழிக்கப்பட்ட கடந்த காலம் எதுவும் இல்லை; சமரசத்திற்கு உள்ளான வரலாறும் இல்லை. கடவுள் நம்மை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்கிறார். தனிமை, அவமானம், கைவிடுதல் மற்றும் வாழ்க்கைப் போராட்டத்தின் அன்றாட நரகத்திலும், நாம் தந்தையின் அன்பிற்குச் சாட்சியமளிக்க முடியும்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.