“என் போன்றோரின் இளமைக் காலங்களில் பதற்றம், மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற வார்த்தைகளை நாங்கள் கேள்விப்பட்டதில்லை. பெற்றோரிடம்கூட இதைக் கூற முடியாது. ஆனால், தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்று வயது பெண் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது, ‘குழந்தைக்கு உடல்ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை; அது மனஅழுத்தத்தால் ஏற்படுகிறது’ என்றார். மாணவர்கள், எத்தனை மணிநேரம் கைப்பேசியை ஒதுக்கி வைக்கிறீர்களோ அதைப் பொருத்து மன ஆரோக்கியமும் மேம்படும்.”
நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன்,
மனித உரிமைகள் ஆணையத் தலைவர்
“இந்திய
அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பும் பின்பும் நீதி மன்றங்கள் ஆதிக்க சாதியைச் சார்ந்த கருத்துகளை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான நிலையையே பெரும்பாலும் எடுத்து வந்துள்ளன. தமிழ்நாட்டில் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற அரசாணை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அர்ச்சகர்களுக்கான தகுதிகளைப் படித்து, முறையாகப் பயிற்சி பெற்ற பிறகும் அனைத்துச் சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை. சாதிய ஒழிப்புக்கு எதிரான இந்தச் சட்டப் போராட்டத்தில் பி.வி.பி.
போன்ற அறக்கட்டளைகள் மக்கள் மன்றங்களிலும் தங்களது பணியைச் சிறப்பாகச் செய்யவேண்டும்.”
உயர்திரு. அரிபரந்தாமன்,
சென்னை உயர் நீதிமன்ற
மேனாள் நீதிபதி
“குரு,
சீடர் உறவு உண்மையாக இருத்தல் வேண்டும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வாழும் காலங்களில் சாதனை படைக்க வேண்டும். வாழும் காலங்கள் அர்த்தமுள்ளதாகவும், மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். இதற்குச் சான்றாகப் பல்வேறு நூல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற நூல்களை வாசிப்பதன் மூலம் சாதனை படைக்கலாம்.”
பேராசிரியர் அரங்க.இராமலிங்கம்