news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (02-11-2025)

புனிதத்துவம் என்பது ஒப்பீடல்ல; ஒன்றிப்பையும், பிறருக்கான ஊக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது.”

அக். 13, இறை ஊழியரான கர்தினால் இரஃபேல் மேரி தெல் வால் அவர்களின் 160-வது பிறந்தநாள்

கலை, நம்பிக்கை, மனிதாபிமானம் மற்றும் ஒருங்கிணைப்பின் முன்னுதாரணமாகத் திகழ்கிறது இத்தாலி.”

அக். 14, இத்தாலிய அரசுத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் சந்திப்பு

உயிர்த்தெழுந்த இயேசுவே நம் வாழ்வின் ஊற்று; அவர் நம் பயணத்தின் நோக்கமும் நம்பிக்கையும் ஆவார்.”

அக். 15, புதன் மறைக்கல்வி உரை

தவறான எண்ணங்களை மறந்து, மன்னிப்பையும் அமைதியையும் பரப்பும் இளைஞர்களை ஊக்குவிப்போம்.”

அக். 17, உரோமின் ஓஸ்தியா கடற்கரையில் மாணவர்களோடு சந்திப்பு

சுரண்டலை எதிர்த்து மனித மரியாதையை மீட்டெடுப்பதே யூபிலியின் நீதியும் நோக்கமும் ஆகும்.”

அக். 18, தேசிய வட்டி எதிர்ப்பு சங்க உறுப்பினர்கள் சந்திப்பு

நம்பிக்கை நீதியின் அடிப்படை; புதிய புனிதர்கள் அதை வாழ்ந்து காட்டிய நேர்மையான சாட்சிகள்.”

அக். 19, திருப்பயணிகளுக்கான மறையுரை